விஜய் தனி ஸ்டைல். ஆனால், அஜித்தோட அந்த விஷயம் யாருக்கும் வராது- நடிகர் வெங்கடேஷ்.

0
23517
venkatesh
- Advertisement -

டோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் வெங்கடேஷ். இவர் இதுவரை தெலுங்கில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கு மொழயில் மட்டும் இல்லாமல் தமிழ் மொழி படங்களிலும் நடித்து உள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த அசுரன் படம் மிகப் பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு நரப்பா என்று பெயர் வைத்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

வீடியோவில் 16 நிமிடத்தில் பார்க்கவும்

- Advertisement -

அசுரன் படத்தில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் தான் தெலுங்கில் பிரபலமான நடிகர் வெங்கடேஷ் நடித்திருக்கிறார். மேலும், மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி அவர்கள் நடிக்கிறார். இந்த படத்தை தெலுங்கில் ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு மணிசர்மா இசை அமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக போய் கொண்டு உள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக கோவில்பட்டி வந்து உள்ளார் நடிகர் வெங்கடேஷ்.

இந்நிலையில் பிரபல நடிகர் வெங்கடேஷ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் அஜித், விஜய் குறித்து அற்புதமான சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, விக்ரம் அவர்களின் நடிப்பெல்லாம் சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு தூள். விஜய்க்கு என்று ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. அவருடைய நடனங்கள், நடிப்பு எல்லாமே ஸ்மூத்தாக இருக்கும். அவர் ஸ்டைல் வேற லெவல்.

-விளம்பரம்-

நடிகர் சூர்யா ஒரு அற்புதமான நடிகர். அஜித் பாத்தீங்கன்னா தமிழ் சினிமா உலகில் ஸ்பெஷலான நடிகர். கோலிவுட்டில் அஜித்துக்கு என்ற ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவரின் Swag என்னை கவர்ந்து உள்ளது. இப்படி ஒவ்வொருவரு நடிகரும் தனக்கென ஒரு தனித்துவத்தை கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் சூப்பர் ஸ்டாருக்காக திகழ்ந்து வருகிறார்கள்.

இதில் என்ன சிறப்பு என்று பார்த்தால் யாரும் ஒருவரை போல் ஒருவர் ஸ்டைலை பாலோ பண்ண மாட்டார்கள். அவர்கள் எல்லோரும் தங்களுடைய ஸ்டைலில் சிறந்து விளங்கி வருகிறார்கள் என்று கூறினார். இப்படி இவர் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதனால் தல, தளபதி ரசிகர்கள் எல்லோம் பயங்கர குஷியில் உள்ளார்கள். நடிகர் வெங்கடேஷ் தெலுங்கில் நடித்த பல படங்கள் தமிழில் டப் செய்து ரிலிஸ் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement