நடிகர் பிரம்மானந்தாவை தெரியவாதவர்கள் யாராவது இருப்பார்களா ? நடிகர் பிரம்மானந்தம் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும். இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ விஜய் படத்தில் தான் விஜய் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கில்லி படத்தில் தான் நடிகர் பிரம்மானந்தம் தமிழில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் விஜய் வீட்டில் பூஜை செய்யும் ஐயராக இவர் நடித்திருந்தார். ஒரு காட்சியில் வந்தாலும் இவரது நடிப்பு பலரால் ரசிக்கப்பட்டது.

கில்லி திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் பிரம்மானந்தம் தமிழில் நியூ, மொழி, சரோஜா வானம் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருந்தார். இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான டகால்டி படத்திலும் நடித்திருந்தார். ஆனால், நடிகர் பிரம்மானந்தம் விஜயுடன் ஒரு முழுநீள காமெடியனாக நடித்திருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்தான். நாம் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ஜில்லா படத்தில் தான் பிரம்மானந்தம் நடித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : என் மகளோட கம்பள அடமானம் வச்சி 15,000 கொடுத்திருக்கேன் – சூர்யா தேவி ஷாக்கிங் வீடியோ.

Advertisement

அதிர்ச்சியாக இருக்கிறதா ? ஆனால் அதுதான் உண்மை. தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ஜில்லா படம் 2015ஆம் ஆண்டு தெலுங்கிலும் வெளியானது. ஆனால் இந்தப் படம் நேரடியாக வெளியாகாமல் டப்பிங்கில் தான் வெளியாகியிருந்தது. தமிழில் ஜில்லா படத்தில் விஜயுடன் படம் முழுவதும் காமெடியனாக நடித்து வந்தசூரியின் கதாபாத்திரத்தில் தான் பிரம்மானந்தம் தெலுங்கில் நடித்து இருந்தார்.ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க பல்வேறு தெலுங்கு நடிகர்களிடம் பேசப்பட்டது.

முதலில் இந்த படத்தில் சிரஞ்சீவியும் மற்றும் அவரது மகனும் நடிப்பதாக இருந்தது. இந்த படம்தான் சிரஞ்சீவியின் 150 வது படமாக அமைவதாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணத்தால் இந்த படம் கைநழுவியது. அதன் பின்னர் இந்த படத்தில் பாலகிருஷ்ணாவும் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பதாக இருந்தது. பின்னர் அதுவும் கைவிடப்பட்டது பின்னர் பல நடிகைகளிடம் கைமாறிய இந்த படம் இறுதியில் ஜில்லா என்ற பெயரிலேயே தெலுங்கில் டப்பிங் செய்து வெளியானது.

Advertisement

Advertisement
Advertisement