செம்மரம் வெட்டுகிறவர்களை தமிழ் கூலிகளாக காட்டும் தெலுங்கு சினிமா ? பதிலடியாக வெளியாகவுள்ள தமிழ் திரைப்படம்.

0
430
Pushpa
- Advertisement -

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எல்லாம் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஸ்பா. இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆந்திரா பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் செம்மரம் வெட்டும் கூலியாக கதாநாயகன் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். இவர் தெலுங்கர். படத்திலும் இவர் தெலுங்கர் என்று தான் குறிப்பிடுவார். இந்த படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்த போதும் இந்த காட்சியை மாற்றவில்லை. அதுமட்டுமில்லாமல் ஆந்திரா, தெலுங்கானாவில் செம்மரம் வெட்டும் நபர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.

- Advertisement -

புஸ்பா படம்:

அதிக சம்பளம் கிடைக்கும் என்பதற்காக செம்மரம் வெட்ட போய் பலபேர் சிறைக்குப் போய் இருக்கிறார்கள். இது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், மரம் வெட்டும் வேலை என்று சொல்லி அவர்களை அழைத்து போய் செம்மரம் வெட்ட வைத்து சிறைக்கு அனுப்பி இருக்கிறார்கள். இது பலரும் அறியாத அரசியல் பின்னணி. இந்நிலையில் இந்த அரசியல் பின்னணியை மையப்படுத்தி தான் தமிழில் ரெட் வுட் என்ற படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளிவந்த ரவிதேஜாவின் ராமராவ் ஆன் டூட்டி திரைப்படத்தில் செம்மர கடத்தல் பற்றி பேசப்பட்டு இருந்தது.

ராமராவ் ஆன் டூட்டி படம்:

இதில் செம்மரம் வெட்டும் நபராக தமிழர்கள் காட்டப்பட்டிருந்தார்கள். ஜெ ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது செம்மரம் வெட்டியதாக ஆந்திராவில் 20 தமிழர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டிருந்தார்கள். அந்த நிகழ்வைதான் இந்த படத்தில் வைத்திருந்தார்கள். அவர்களை சுட்டுக் கொள்ளும் காவல் அதிகாரியாக தமிழர் ஆன நடிகர் ஜான் விஜய் நடித்திருக்கிறார். இந்த என்கவுண்டரின் போது வெளியான செய்திகள் எல்லாம் அப்படி படத்திலும் காட்டப்பட்டிருக்கிறது. தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளாத படுகொலை, அரச பயங்கரவாதம்.

-விளம்பரம்-

செம்மர அரசியல்:

ஆனால், புஷ்பா படத்தில் மரத்தை வெட்டுபவர்கள் தெலுங்கர்களாகவும், அதனை கைமாற்றிவிட்டு அதிகம் சம்பாதிப்பவர்கள் தமிழர்களாகவும் காட்டிருந்தார்கள். ஆனால், ராமராவ் ஆன் டூட்டி படத்தில் செம்மரம் வெட்டுகிற கூலிகள் தமிழர்களாகவும், இடைத்தளர்கள் முதலாளியார்கள் அனைவரும் தெலுங்கர்கள் என்றும் காட்டப்படுகிறது. உண்மை என்னவோ ராமராவ் அண்ட் டூட்டி படத்தில் காட்டப்படும் காட்சிகள் தான். ஆந்திரா அரசு இந்த கடத்தலின் ஆணிவேரான முதலாளிகளை விட்டுவிட்டு கூலிக்கு வேலை சென்ற தமிழர்களை சுட்டுக்கொன்றது.

ரெட்வுட் படம்:

இந்நிலையில் தற்போது தமிழில் தயாராகி வரும் ரெட்வுட் திரைப்படத்தில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் நபர் சந்தர்ப்பவசத்தால் செம்மரம் வெட்டும் கும்பலிடம் சேர்ந்து விடுகிறார். இதன் பின்னால் உள்ள அரசியலை மையமாக வைத்து தான் இந்த படம் நகர்கிறது. செம்மர அரசியலை தெலுங்கு மொழியில் இரண்டு படங்கள் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால், தமிழில் இதற்கு எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. தற்போது ரெட்வுட் படம் மூலம் செம்மர அரசியல் குறித்து பல ரகசியங்களை கொண்டுவர இருக்கிறது.

Advertisement