தாடி பாலாஜியின் மனைவி நித்யா இளைஞர் ஒருவருடன் அடிதடியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வருடமாகவே சோசியல் மீடியாவில் தாடி பாலாஜியின் குடும்ப பிரச்சனை தலை விரித்து ஆடி கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.
இவர்களுக்கு போஷிகா என்ற மகள் இருக்கிறார். ஆனால், இவரின் குடும்ப பிரச்சனை ஊருக்கே தெரிந்தது. தாடி பாலாஜியும், நித்யாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனம் ஆடும் போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சினை வெளிவந்தது. பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட்டு என இவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியுலகத்தில் வந்து கொண்டிருந்தது. அதோடு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
தாடி பாலாஜி- நித்யா பிரச்சனை:
பிறகு கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாகவும் தான் வாழ்ந்து வருகிறார். தற்போது நித்யா மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். ஆனால், அதற்கு முன் நித்யா ஐடி துறையில் ஒரு பெரிய கம்பெனியில் பணிபுரிந்தவர்.
நித்யா குறித்த தகவல்:
அதற்கு பிறகு பெரிய பிரபலமான மருத்துவமனையில் எச்.ஆர்.அதிகாரியாக இருந்தவர் நித்யா. பாலாஜியை கல்யாணம் செய்த பிறகு தான் நித்யா வேலையிலிருந்து விலகி விட்டார். மேலும், நித்யா கணவரை விட்டு பிரிந்தாலும் தன்னுடைய சொந்தக் காலில் நின்று தன் குழந்தையை காப்பாற்றி வருகிறார். மேலும், இவர்கள் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாலும் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை வெடித்து கொண்டு தான் இருக்கிறது.
நித்யா-கலைச்செல்வன் மோதல்:
இந்நிலையில் நித்யா இளைஞர் ஒருவருடன் அடிதடியில் ஈடுபட்டு இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, மாதவரத்தில் உள்ள சாஸ்திரி நகரில் நித்யா வசித்து வருகிறார். அதே பகுதியில் பொன்னியம்மன் மேடு நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவருக்கு 29 வயது ஆகிறது. இவர் நித்தியாவிடம் 94,000 கடனாக வாங்கி இருக்கிறார். அதில் 52 ஆயிரம் ரூபாய் மட்டும் கலைச்செல்வன் திருப்பிக் கொடுத்திருக்கிறார். மீதி தொகையை நித்யா திருப்பி கேட்டதற்கு கொடுக்காமல் இழுத்தடித்து சென்றிருக்கிறார்.
நித்யா அளித்த புகார்:
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கொடுத்த கடனை வாங்குவதற்காக கலைச்செல்வனின் வீட்டிற்கு நித்யா சென்றிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அடிதடியாகி இருவருக்குமே காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் நித்யா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருக்கிறார். அப்போது மருத்துவமனை நிர்வாகம் போலீஸிடம் புகார் அளித்திருக்கிறது. புகார் அளித்த அடிப்படையில் போலீசார் இருவரிடம் விசாரணை நடத்துகிறது. இதனை அடுத்து இருவரும் தனித்தனியே போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.