கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா பற்றிய விவகாரம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்படி பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நித்தியா வசிக்கும் பகுதியில் உள்ள மாணிக்கம் என்ற ஆசிரியரின் காரை தாக்கி சேதப்படுத்தியதாக வந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த விஷியத்தை நித்யா.
மேலும் சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் அவர்களுடைய வீடு உள்ள பகுதியில் மது விற்பனை அதிகாலையிலேயே நடக்கிறது என்றும் லஞ்சம் வாங்கிக்கொண்டு அதனை காவல் துறை அனுமதிக்கிறது என்றும் கூறினார் நித்யா. மேலும் 9 ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை மக்களை நல்வழிப்படுத்த பாஜகவில் தலைவராக சேர்ந்தார். நானும் பாஜகவில் இணைய உள்ளேன். காயத்ரி ரகுராம் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொன்னது உண்மையா? பொய்யா? என்பது நான் பாஜகவில் பணியாற்றிய பிறகே தெரியும். எனவே நான் சென்று பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்று கூறினேன் தாடி பாலாஜி மனைவி நித்யா.
பாஜகாவில் பணியாற்ற விரும்புகிறேன் :
இப்படி பட்ட நிலையில் தான் நித்யா தற்போது பிரபலமான ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் மத்திய அரசு மக்களுக்கு எவ்வளவோ நல திட்ட பணிகளை செய்கிறது. அந்த திட்டங்கள் எனலாம் தேசிய கட்சியில் இருந்தால் மக்களுக்கு அந்த திட்டங்கள் கிடைக்க உதவலாம் என்று தோன்றியதது. ஆனால் நான் மக்கள் நீதி மையத்திற்கு செல்லலாம் என்று நினைத்தேன் ஆனால் அந்த கட்சியில் என்னால் இருக்க முடியவில்லை.
மேலும் தமிழ் நாட்டின் பாஜக தலைவரான அண்ணாமலையின் செயல்பாடுகள் எனக்கு பிடித்திருக்கிறது அதனால் அவரது தலைமையின் கீழே பணியாற்ற விரும்பினேன் அதனால் தான் அவரை சென்று சந்தித்தேன். விரைவில் நான் பாஜகவில் இணைத்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய்யவுள்ளேன். இப்படி கூறிய அவரிடம் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற அசீம் பற்றி கேட்கப்பட்டது.
பிக் பாஸ் ஸ்கிரிப்ட் தான் :
அதற்கு பதிலளித்த நித்யா “பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் அறிமுகமானபோது எனக்கும் அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் நான் கலந்து கொண்ட சீசனில் தான் அந்த நிகழ்ச்சி பற்றி தெளிவாக அறிந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் அனைவரும் சரியாக ஸ்கிரிப்டின் படி விளையாடுவார்கள் அதனால் தான் மக்கள் அந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்து ஏமாந்து போவதாக நான் எண்ணுகிறேன். அதனாலேயே நான் கலந்து கொண்ட சீசனை தவிர மற்ற சீசன்களை பார்க்கவில்லை.
ரித்திகா சும்மாதா இருந்தாங்க :
ஆனால் இந்த பிக் பாஸ் சீசனில் அசீம் வெற்றி பெற்றது குறித்து பலவிதமான கருதுகள் எழுந்தன. நானும் அவற்றில் சிலவற்றை பார்த்தேன். நான் கலந்து கொண்ட பிக் பாஸ் சீசனின் எதுவுமே செய்யலாம் இருந்த ரித்திகாவுக்கு கோப்பையை கொடுத்தார்கள். அப்படியிருக்கும் அசீம் நல்ல கன்டென்ட் கொடுத்திருப்பார். அத்னால் தான் இவருக்கு டைட்டில் கொடுத்திருக்கின்றனர்.இதில் மற்றவர்கள் பொறாமை படுவதற்கு என்ன இருக்கிறது என்று கூறினார் நித்யா.