ஹாலிவுட்டை மிஞ்சிய முத்த காட்சி.! அருண்விஜய்யின் `தடம்’ ட்ரெய்லர்..!

0
1479
Thadam
- Advertisement -

வித்தியாசமான கதைகளில் நடித்து சினிமாவில் தனக்கான இடத்தைத் தக்க வைத்திருப்பவர் நடிகர் அருண்விஜய். அஜித்துடன் `என்னை அறிந்தால்’ படத்தில் இவர் நடித்த நெகட்டிவ் கேரக்டர் பலராலும் பாராட்டு பெற்றது. இந்தப் படம் சினிமா உலகில் இவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

-விளம்பரம்-

- Advertisement -

இந்தநிலையில் அருண்விஜய் `தடம்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் இந்தப் படம் உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. அருண்விஜய், மகிழ்திருமேனி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் `தடம்’ என்பதால் எதிர்பார்ப்பு மிகுதியாகக் காணப்படுகிறது.

த்ரில்லர் ஜானரான இந்தப் படத்தில் யோகி பாபு, சோனியா அகர்வால் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கின்றனர். ரொமான்டிக் மற்றும் ஆக்‌ஷன் சேர்ந்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. அருண்விஜய் நடித்த, மணிரத்னத்தின் `செக்கச் சிவந்த வானம்’ படத்தின் ட்ரெய்லரும் சில நாள்களுக்கு முன்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement