தாடி பாலாஜி சொன்னதெல்லாம் உண்மை தானா ? – விசாரணையில் முன்னேற்றம்

0
9348
Actor and Anchor Balaji Wife Nithya

விஜய் டிவியில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. அந்த நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக வருபவர் பாலாஜி. இவரை அடையாளமாக தாடி பாலாஜி எனக்கூறுவது வழக்கம்.
Thadi Balajiஇவரும் இவரது இரண்டாவது மனைவி நித்யாவிற்கும் கடந்த ஓது வருடமாகவே கருத்து வேறுபாடு மற்றும் சர்ச்சைகள் வந்த வண்ணம் தான் உள்ளது.பாலாஜி, நித்யாவின் மீது குற்றம் சாட்டுவதும், அவர் இவர் மீதும் குற்றம் சாட்டுவதும் வாடிக்கையாகவே இருந்து வந்தது.

இதையும் படிங்க: என்னை நிம்மதியா வாழ விடுங்க பாலாஜி ப்ளீஸ்- கதறும் பாலாஜியின் மனைவி நித்யா !

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாடி பாலாஜி மனைவி நித்யா மற்றும் அவரது குழந்தையை கொடுமை படுத்துவது போல ஓரூ வீடியோ வெளியே வந்து பிரச்சனையை மேலும் பெரித்தாக்கியது.
Thadi Balaji -Nithyaபின்னர் இருவரும் காவல் துறையில் மாறி மாறி புகார் கொடுக்க பிரச்சனை பெரிதாகியது. பாலாஜியின் மனைவி நித்யாவிற்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் நண்பராக இருந்து வந்துள்ளார்.கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பாலாஜி, அவரது மனைவி நித்யா,  நித்யாவின் ஆண் நண்பர், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் விசாரணை நடந்துள்ளது.
Thadi Balaji -Nithyaஇதில், பாலாஜியின் மனைவி நித்யா தன் ஆண் நண்பருக்கு அன்பளிப்பாக செல்போன் வாங்கிக்கொடுத்த தகவல் வெளியானது. இதன் பேரில் நித்தவின் ஆண் நண்பரை போலீசார் தீவிரமாக விசாரித்ததாகவும், அவரை கடுமையாக எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. ஆகையால் இந்த வழக்கு தாடி பாலாஜிக்கு சாதகமாகவும் முடிய வாய்ப்புள்ளது. நித்யா தரப்பிலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்க படுவதால், அவர் தரப்பிலும் நியாயங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆகையால் விசாரணை முழுமையாக முடிந்தால் தான் யார் தவறு செய்தார்கள் என்று தெரியும்.