பா ஜ கவில் இணையப் போகிறேன் – press Meetல் காரணத்தை சொன்ன தாடி பாலாஜி மனைவி நித்யா

0
686
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவரின் குடும்ப பிரச்சனை ஊருக்கே தெரிந்தது. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி தான் நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். தாடி பாலாஜியும், நித்யாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனம் ஆடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சினை வெளிவந்தது

-விளம்பரம்-

குடும்ப பிரச்சனை :

பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட்டு என இவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியுலகத்தில் வந்துகொண்டிருந்தது. இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தான் தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்தனர் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரையில் இருவரும் தனியாகத்தான் வாழ்ந்து வருகின்றனர்.

- Advertisement -

கைது செய்யப்பட்ட நித்யா :

தற்போது நித்யா சென்னை மாதவரம் பகுதி சாஸ்திரி நகரில் தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நித்யா வசித்து வரும் அதே பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் வசித்து வந்துள்ளார். நித்யா நேற்று நள்ளிரவு அந்த ஆசிரியரின் காரை கற்களால் தாக்கி சேதப்படுத்தினார் என்று ஆசிரியல் வழக்கு பதிவு செய்ய நித்யாவை போலீசார் கைது செய்த்தனர். நித்யா தற்போது ஜாமினில் வெளியில் வந்துள்ளார்.

நித்யா கொடுத்திருந்த பேட்டி :

இந்த நிலையில் தான் நித்யா ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் நித்யா கூறுகையில் “அந்த ஆசிரியரின் பெயர் மணி, ஓய்வு பெற்ற அவர் தற்போது மளிகை கடை நடந்து வருகிறார். அவருக்கும் எனக்கு பல காலமாகே சுமுகமான நட்பு கிடையாது. எனக்கும் என்னுடைய கணவருக்கும் பிரச்சனை நடக்கும் போது முழுக்க முழுக்க இவர்தான் பாலாஜிக்கு ஆதரவாக இருந்தார். என்னுடைய வீட்டில் நடக்கும் விஷியங்களை பாலாஜிக்கு சொல்வதே இவர் தான். பாலாஜி என்னை அடித்த போது நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

பொய் புகார் :

இவருடன் சுமுகமான நட்பு இல்லாத காரணத்தினால் சிறிய பிரச்னை கூட பெரிதாக வெடிக்கிறது. பொங்கல் அன்று அவருடைய குடும்பத்துடன் சண்டைக்கு வந்தார். என்னுடைய நடத்தை குறித்து அவதூறாக பேசினார். நான் வயதில் பெரியவர் என்று மாறியதையை அவர் உடைத்ததால் நானும் பேசினேன். இப்போது அவருடைய காரை சேதப்படுத்தினேன் என்று பொய்யாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை எதிர்கொள்ள தயார் :

அந்த சம்பவம் நடந்த அன்று நான் “துணிவு” படம் பார்த்துவிட்டு இரவில் வீட்டிற்கு வந்தேன். அப்போது எடுத்த cctv காட்சிதான் அது மற்றபடி எதுவும் நடக்கவில்லை. நான் வீட்டிக்கு செல்லும் போது சாவி காணாமல் போய்விட்டது எனவே அதை தேடித்தான் அங்கு வந்தேன். அந்த காட்சியில் இருப்பது முற்றிலும் புனையப்பட்டது. அந்த ஆசிரியரின் குடும்பத்தினர் என்னிடம் அதிக பணத்தை கேட்டு கொலை மிரட்டல் விட்டனர். ஆனால் நான் அந்த பணத்தை தர மறுத்தினால் என்னை போலீசில் பொய் புகார் கொடுத்துள்ளனர்.

காயத்ரி சொல்வது உண்மையா? பொய்யா? :

எங்களுடைய பகுதியில் அதிகாலையிலேயே மது விற்பனை நடக்கிறது. லஞ்சம் வாங்கிக்கொண்டு அதனை காவல் துறை அனுமதிக்கிறது என்றும் கூறினார் நித்யா. மேலும் 9 ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை மக்களை நல்வழிப்படுத்த முடியாததால் பாஜகவில் தலைவராக சேர்ந்தார். நானும் பாஜகவில் இணைய உள்ளேன். காயத்ரி ரகுராம் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொன்னது உண்மையா? பொய்யா? என்பது நான் பாஜகவில் பணியாற்றிய பிறகே தெரியும். எனவே நான் சென்று பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்று கூறினேன் தாடி பாலாஜி மனைவி நித்யா.

Advertisement