காந்தாரா படத்தின் பாடல் திருடப்பட்டதா ? குற்றம் சாட்டிய தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு – பின்ணணி இது தான்

0
562
kantara
- Advertisement -

காந்தாரா படத்தின் பாடல் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவில் இருந்து வெளியான பாடலின் திருட்டு என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படங்களில் ஒன்று கே ஜி எஃப். இந்த படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் பிலிம்ஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தை அடுத்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தற்போது காந்தாரா என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஜனீஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரிஷப் ஷெட்டி தான் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் சமீபத்தில் தான் கன்னட மொழியில் வெளியாகி இருந்தது. இந்த படம் மிக பெரிய வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

காந்தாரா படம்:

மேலும், தமிழில் இந்த படம் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தான் இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டு இருக்கிறார். தமிழகத்திலும் காந்தாரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனரும், நடிகரும் ஆன ரிஷப் செட்டி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பேசி இருந்தார்.

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படம் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பழமொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. இந்த படம் பிறமொழி ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் படத்தை பார்த்து திரைப்பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சனங்கள் என பலருமே பாராட்டி வருகின்றனர். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலரையும் பிரம்மிக்க வைத்திருந்தது என்று கூறப்படுகிறது. குறிப்பாக, அதில் இடம்பெற்ற ‘வராஹ ரூபம்’ என்ற பாடல் படத்திற்கு வலுச்சேர்த்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த பாடல் திருடப்பட்டது என்ற சர்ச்சை தற்போது எழுந்து உள்ளது.

-விளம்பரம்-

தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு:

அதாவது, கேரளாவை சார்ந்த ‘தாய்க்குடம் பிரிட்ஜ் (Thaikkudam Bridge) என்கிற இசை குழு காந்தாரா திரைப்படத்தின் கிளைமாக்ஸில் இடம் பெற்ற வராஹ ரூபம்’ என்ற பாடல் 2017 ஆம் ஆண்டு வெளியான தங்களின் நவரசம் பாடல் இருந்து எடுக்கப்பட்டது. அதோடு இந்த பாடல் காப்புரிமை சட்டத்தை மீறி இயற்றப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கின்றனர். இதுகுறித்து தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினர் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்கள். அதில், தாய்க்குடம் பிரிட்ஜ் எந்தவிதத்திலும் ‘காந்தாரா’ படக்குழுவுடன் இணைந்து பணியாற்றவில்லை. எங்களுடைய ‘நவரசம்’ எனும் பாடலும் ‘காந்தாரா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வராஹ ரூபம்’ என்ற பாடலுக்கும் தவிர்க்க முடியாத நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.

தாய்க்குடம் பிரிட்ஜ் போட்ட போஸ்ட்:

இது பாடலின் காப்புரிமைச் சட்டத்தை மீறுகிறது. எங்களைப் பொறுத்தவரைப் பாடல் திருட்டுக்கும் பாடலைத் தழுவி இயற்றப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று கருதுகிறோம். எங்களது பாடலுக்கும் எங்களுக்கும் எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் படக்குழுவினரால் இப்பாடல் அசல் படைப்பாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இப்பாடல் ‘நவரசம்’ பாடலின் காப்பி என்பதால் ‘காந்தாரா’ படக்குழுவினர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று கூறி இருக்கின்றனர்.

Advertisement