நஸ்ரியா, கல்யாணி தொடர்ந்து தல 59 படத்தில் இணைந்த மற்றும் ஒரு சூப்பர் ஹிட் பட நடிகை..!

0
1158
- Advertisement -

‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘பிங்க்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். சதுரங்கவேட்டை எச்.வினோத் இயக்கவுள்ள இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கான கதாபாத்திரத்திற்கான தேர்வு படு மும்மரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் நஸ்ரியா, இயக்குனர் ஆத்விக், பிரபல செய்தி தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

இதையும் படியுங்க : தல 59 படத்தில் ஒப்புக்கொண்டது இதனால் தான்..!முதன் முறையாக வாய் திறந்த ரங்காராஜ் பாண்டே..!

- Advertisement -

இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிங்க் படத்தின் ரீமேக் என்பதும் நாம் அனைவரும் அறிவோம். அந்த படத்தில் அமிதாப் பச்சன் ஒரு வழக்கரிஞராகவும் அவருடன் மூன்று முக்கிய பெண் கதாபாத்திரமும் நடித்திருப்பார்கள்.

அதில் ஒரு கதாபாத்திரத்தில் நஸ்ரியாவும், இரண்டாவது கதாபாத்திரத்தில் பிரியதர்‌ஷன் மகள் கல்யாணியும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் மூன்றாவது கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement