முதுகில் அத்தனை ஆப்ரேஷன். இருப்பினும் வெளிநாட்டில் மீண்டும் கார் ரேஸில் அஜித் ?

0
1106
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றும் அல்டிமேட் ஸ்டாராக பிரதிபலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். கடந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளி வந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்தது. இந்த இரண்டு படங்களுமே ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்தது என்று கூட சொல்லலாம். பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளி வந்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை திரைப்படம்.

-விளம்பரம்-
ajith

தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள் எனவும் அறிவித்தார்கள். இது தல அஜித்தின் 60வது படம் ஆகும். அதோடு இந்த படம் இயக்குனர் வினோத்தின் சொந்த கதையை மையமாகக் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் பாருங்க : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது கை குழந்தையுடன் வந்த நிஷா. வைரலாகும் வீடியோ.

- Advertisement -

சமீப காலமாகவே தல அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த படத்திற்காக தல கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்தில் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். அதோடு ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும், தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. வழக்கம் போல் இந்த படத்தில் அதிரடி, ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும். ஏற்கனவே, அஜித்திற்கு கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு விபத்தில் சிக்கி பல முறை அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார் அஜித்.

இந்நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுத்து முடிக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக சென்னையில் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து படக்குழுவினர் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளது என்று தெரியவந்து உள்ளது. அதோடு அஜித் அவர்களின் அதிரடி சம்பந்தப்பட்ட காட்சிகளும் சுவிட்சர்லாந்தில் தான் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர குஷி ஆகி விட்டார்கள். இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிப்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில் காலா படத்தில் ரஜினிக்கு காதலியாக நடித்த ‘ஹீமோ குரோஷி’ தான் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இன்னும் இந்த தகவல் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த படம் 2020 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

Advertisement