ப்பா, தலைவா படத்தின் போதே படு கிளாமர் போட்டோ ஷூட் நடத்தியுள்ள நடிகை – வீடியோ இதோ.

0
25819
thalaiva

தமிழில் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய “தலைவா ” ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது. இந்த படத்தில் விஜயை காதலிக்கும் வட இந்திய பெண்ணாக நடித்தவர் நடிகை ரஜினா நந்த்வாணி. அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் இவர் நடித்திருந்தாலும், அந்த அப்படத்தில் நடித்த கதாநாயகியான அமலா பாலைவிட இவர் தான் ரசிகர்கள் மனதை அதிகம் கொள்ளையடித்தார்.

ராகினி நந்த்வாணி, 1989 ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலம் டேராடுனில் பிறந்தார். 2005 ஆம் ஆண்டு சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி தொடரில் சிறு வேடத்தில் நடித்து தனது கலை பயணத்தை தொடங்கினார். இதுவரை இந்தியில் பல்வேறு தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

- Advertisement -

2005 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவருக்கு 2011 ஆம் ஆண்டு பிரபல ஜீ இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரபான “கௌஷிக் கி பாஞ்ச பஹுயின் ” என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடர் இந்தி ரசிகர்களிடையே பெரும் ஹிட்டாக மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்றார் நடிகை ராகினி நந்த்வாணி. அந்த தொடருக்காக இவருக்கு சிறந்த சீரியல் நடிகை விருதும் கிடைத்திருந்தது.

அந்த தொடரில் நடித்ததன் மூலம் இவருக்கு இந்தியில் 2013 ஆம் ஆண்டு வெளியான “டேராடுன் டைரி ” என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது. மேலும், இவர் தமிழில் அறிமுகமானது 2005 ஆம் ஆண்டு வெளியான ‘அயோத்யா’ என்ற படத்தின் மூலம் தான். ஆனால், அந்த படம் இவருக்கு சரியான அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை.

-விளம்பரம்-
Advertisement