ரஜினிக்காக சண்டை போட்டுக்கொண்ட குஷ்பு-மீனா. தற்போது வைரலாகும் பழைய வீடியோ.

0
17501
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் . இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கால் பல வருடங்களுக்குப் பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படத்தை பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் தலைவர் ரஜினி காந்த்தின் அடுத்த படத்திற்கான பூஜை நடை பெற்று வருகிறது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளி ஆகி உள்ளது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர குஷியில் ஆரவாரம் செய்து வருகிறார்கள். சிவா இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ‘தலைவர் 168’ படத்தின் பூஜைகள் நடைபெற உள்ளது என்று கூறினார்கள். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்று பல கேள்விகள் இணையங்களில் எழுந்தது. முதலில் நடிகை குஷ்பூ தான் நடிக்கிறார் என்று கூறினார்கள். பின்னர் நடிகை மீனா தான் நடிக்கிறார் என்று கூறினார்கள்.

இதையும் பாருங்க : காமெடி நடிகர் சதீஷின் திருமணம். குடும்பத்துடன் சென்ற சிவகார்த்திகேயன். புகைப்படம் இதோ.

- Advertisement -

ஆனால், இந்த படத்தில் இவர்கள் இருவருமே ரஜினியுடன் நடிக்கிறார்கள் என்று தற்போது தான் தகவல் வெளியானது. இவர்கள் இருவரும் ரஜினியுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் யார்? என கேள்விகள் எழுந்த போது இவர்கள் இருவருக்கும் பயங்கரமாக விவாதம் செய்தார்கள். அப்போ விவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் குஸ்பு அவர்கள் கூறியது, நீங்கள் எல்லாம் பச்சா, ஜூனியர். நாங்கள் தான் சீனியர் என்று மீனாவை பார்த்து கூறி உள்ளார். மேலும், இந்த வீடியோவை ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள்.

Image

-விளம்பரம்-

பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள் என தகவல் வெளியானது. நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் வந்து உள்ளது. இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

Advertisement