தீம் மியூசிக்குடன் வெளியானது ‘தலைவர் 168 ‘ பட தலைப்பு. பெயர் என்ன தெரியுமா ?

0
6086
Annaatthe
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான ‘தர்பார்’ திரைப்படம் ரசிகர்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வந்தவுடன் சினிமாவில் அவர் நடிக்க மாட்டார் என்ற வதந்தி கிளப்பி விட்டது. ஆனால், அவர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை படம் ரிலீஸ் செய்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இறுதியாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : தெறி பேபியுடன் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட செல்ஃபீ. வைரலாகும் புகைப்படம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்துக்கு இந்த படத்தில் இரண்டு மனைவிகள். ரஜினியின் முதல் மனைவியாக குஷ்பூ நடிக்கிறார். பின் ஏதோ பிரச்சினைகளால் இவர்கள் இருவரும் பிரிகிறார்கள். பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இரண்டாவதாக மீனாவை திருமணம் செய்கிறார். இதற்கு நடுவில் ரஜினிக்கு எதிரியாகிறார் நடிகை குஷ்பூ. மேலும், ரஜினியை, குஷ்பூ பழி வாங்குகிறார்.

-விளம்பரம்-
Image

இது தான் குஷ்புவின் கதாபாத்திரம் என்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் தீம் ம்யூஸிக்குடன் இந்த படத்தின் தலைப்பை வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதோ அந்த வீடியோ.

Advertisement