‘தலைவர் 168’ படத்தில் சிவகார்த்திகேயன் ? ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா சிவா?

0
1348

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரை அரங்கிற்கு வந்த படம் “தர்பார்”. இந்த படத்தில் வில்லனாக சுனில் ஷெட்டி நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர்.

தர்பார் படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள் என தகவல் வெளியானது. மேலும், நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இரு வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில் தலைவர் 168 படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் “ஹீரோ”. இந்த படம் தொடங்கியதிலிருந்தே பல பிரச்சனைகளில் சிக்கி வந்தது. இந்த படத்தி கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், ரோபோ சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த ஹீரோ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் “டாக்டர், சயின்ஸ் பிக்சன்” என்று இரு படங்களில் பிசியாக வருகிறார். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். இது அனைவருக்கும் தெரிந்ததே. ரஜினிகாந்தின் தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது இந்த படத்தில் இருந்து சித்தார்த் விலகியதாகவும், சித்தார்த் பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் தகவல் வந்தது.

-விளம்பரம்-

ஆனால், அதெல்லாம் ரசிகர்கள் டுவிட்டரில் செய்த போலியான ஐடி என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தலைவர் 186 படத்தில் நடிக்க சன் பிக்சர்ஸ் அவர்களின் விருப்பத்தை மறுபரிசீலனை செய்யுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். சிவகார்த்திகேயன் அவர்கள் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வாரா? தலைவர் 168 படத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

Advertisement