தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே சினிமாவில் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று முக்கியமான நபர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க சில இயக்குனர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவிவந்தது. தற்போது அந்த படத்தை ‘தலைவி’ என்ற பெயரில் இயக்கி இருக்கிறார் ஏ எல் விஜய்.

ஏ எல் விஜய் இயக்கி வரும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணவ்த் நடிக்கிறார். இவர், தமிழில் ஜெயம் ரவி நடித்ததாம் தூம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்திற்காக நடிகை கங்கனா தமிழ் மொழியை கூட கற்றுவந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : 82 வயதிலும் தீராத ஃபிட்னெஸ் காதல் – இந்த வயதிலும் விஷால் தந்தைக்கு கிடைத்துள்ள பெருமை. என்ன தெரியுமா ?

Advertisement

தற்போது திரையரங்குகள் 50 % பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னும் வரும் 10 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. ஆனால், இந்த படம் ஒரு சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தியேட்டரில் வெளியாகும் படங்கள் குறைந்த பட்சம் 4 வாரங்களுக்கு பிறகு தான் ஒடிடிக்கு செல்ல வேண்டும் என்பதில் தியேட்டர் உரிமையாளர்கள் திட்டவட்டமாக உள்ளனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை திரையிட ஒரு சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் முன் வராததால் கடுப்பான கங்கனா தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்., இப்போதெல்லாம் தியேட்டரில் படங்களை ரிலீஸ் செய்யவே எனது படத்தின் தயாரிப்பாளர்கள் போல சிலர் மட்டுமே துணிந்து இறங்குகின்றனர்.

Advertisement

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தலைவி போன்ற படத்தை தியேட்டரில் வெளியிட முடியாது என சொல்வது நியாயமற்ற செயல். பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மல்டிபிளக்ஸ் வித்தியாசமான விதிகளை வைத்திருக்கிறது. ராதே படத்தை ஒரே சமயத்தில் Ott மற்றும் திரையரங்குகளில் வெளியிட்டார்கள். அதேபோல மாஸ்டர் திரைப்படம் வெளியான இரண்டு வாரத்தில் OTTயில் வெளியிட்டார்கள். ஆனால் தலைவி படத்திற்கு OTTயில் வெளியாக 4 வாரங்கள் அவகாசம் கொடுத்தும் பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகள் இப்படி செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement