தளபதி 62, விசுவாசம் இரண்டு படத்திலும் கீர்த்தி சுரேஷ் தான் நாயகியா ?

0
1226
ajith vijay keerthi
- Advertisement -

அஜித்திற்கு கடைசியாக வந்த படம் விவேகம், தற்போது அவரது அடுத்த படமான விசுவாசத்திற்கு மும்மரமாக வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தையும் சிவா தான் இயக்குகிறார். அதேபோல் மெர்சல் படத்தை முடித்துவிட்டு தற்போது முருகதாசுடன் அடுத்த படத்திற்கான வேலையை துவங்கிவிட்டார் நடிகர் விஜய்.

Vijay Ajith

இரண்டு படங்களில் பணியாற்றும் டெக்னீசியன்கலை அறிவித்துவிட்டது படக்குழு. ஆனால் தற்போது வரை இரண்டு படங்களின் ஹீரோயின் யார் என ஒருவர் கூட வாய் கூட திறக்கவில்லை.

- Advertisement -

தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. சூர்யாவின் தான சேர்ந்த கூட்டம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி.

keerthi-suresh

இந்த படத்தின் ப்ரோமோசனுக்காக ஒரு பேட்டி கொடுத்தார் கீர்த்தி சுரேஷ். அதில், விஸ்வாசம் மற்றும் தளபதி-62 என இரண்டிலுமே நீங்கள் தான் ஹீரோயின் என செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது. என்ன இது…? உண்மையா…? நம்பலாமா…? இலை வழக்கம் போல இதுவும் வதந்தியா …? என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதில் தான் செம்ம ஹைலைட். அது உண்மை இல்லை என்றால் உடனடியாக, வதந்தி தான் எனக் கூறி இருப்பார் கீர்த்தி. ஆனால் அவர் கூறிய பதில் என்ன தெரியுமா…?

ஆம் என்று சொல்லாமலும், இல்லை என்று கூறாமலும், சின்ன புன் சிரிப்புடன், ஹ்ம்ம்,… அப்படி கூட இருக்கலாம்… இல்லாமலும் போகலாம்… அதுவும் நடக்கலாம்…இதுவும் நடக்கலாம்… தற்போது எதுவும் சொல்ல முடியாது.

keerthi suresh

எனக் மலுப்பலாக பதில் கூறினார் கீர்த்தி சுரேஷ். இதனால் முதன் முதலாக தல தளபதி படத்தில் ஒரே நேரத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் கீர்த்தி என்று தான் தெரிகிறது.

Advertisement