தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய். இறுதியாக அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் தனது 64 வது படத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த படம் தளபதி 64 என்று அழைத்து வரப்படுகிறது . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்டை பட புகழ் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி சாந்தனு பாக்கியராஜ் ஆண்ட்ரியா கௌரி கிஷன் ஸ்ரீமன் சஞ்சீவ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

Advertisement

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தை வெளியிட திட்டமீட்டுள்ளனர். மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 31ம் தேதி அதாவது இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானதை ஒட்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதோடு இந்த படத்தின் செக்கண்ட் லுக் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட உள்ளது என்ற தகவலும் வெளியானது. மேலும், இந்த செக்கண்ட் லுக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் லுக் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

இதையும் பாருங்க : பிரியா பவானி சங்கர் பிறந்தநாளுக்கு எஸ் ஜே சூர்யா செய்துள்ள விஷயம். அப்போ அந்த கிசுகிசு உண்மையா ?

இந்த நிலையில் இந்த படத்திற்கு நம்ம வாத்தியார் என்று தலைப்பு வைத்திருப்பதாக ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘ஜேடி ‘என்ற இரண்டு எழுத்தில் தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான கயல் தேவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விஜய்64 படத்தின் தலைப்பு ஜே டி அதாவது ஜேம்ஸ் துரைராஜ் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியர்கள் நடிக்கின்றார் என்று ஏற்பவே தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தையே தலைப்பாக வைத்துள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

பத்திரிகையாளரான கயல் தேவராஜ் கடந்த ஐந்து ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் இவருக்கு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்தது கயல் திரைப்படம் தான் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாக இருந்த இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் கவனிக்கப்பட்டது மேலும் திரைத்துறையைச் சார்ந்த பல்வேறு செய்திகளை உடனுக்குடன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார். இவர் வெளியிடும் சினிமா சம்பந்தப்பட்ட செய்திகள் மிகவும் நம்பகத் தன்மை உடையதாகவே பார்க்கப்படுகிறது இந்த நிலையில் விஜய்64 டைட்டில் குறித்து அவர் வெளியிட்டுள்ள எந்த தகவலும் உண்மையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது என்ன என்பதை இன்று மாலை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
Advertisement