‘இது வெறும் sample தான், லாரி பின்னாடி நிக்கிது’ – தளபதி 66 நடிகர்கள் அறிவிப்பை தொடர்ந்து வைரலாகும் மீம்ஸ் (முடியலடா சாமி)

0
306
vijay66
- Advertisement -

விஜய் 66 படத்தின் அறிவிப்பை கண்டு மீம் கிரியேட்டர் வச்சி செய்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து இருந்தார் . இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துஇருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்துஇருந்தார். படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான். பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

- Advertisement -

ரசிகர்களை ஏமாற்றிய பீஸ்ட் :

அதுமட்டும் இல்லாமல் விஜய் இந்த படத்துக்கு எப்படி ஓகே சொன்னார்? என்று பலரும் கேள்வி எழுப்பினர்.நிகழ்ச்சி ஒன்றில் கதை எழுதுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேல் நான் அமர மாட்டேன் என்று நெல்சன் பேச்சையும், பீஸ்ட் படத்தையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இப்படி எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் பீஸ்ட் பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வம்சி இயக்கத்தில் விஜய் :

மேலும், பீஸ்ட் அடுத்து ரஜினியை வைத்து நெல்சன் இயக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுத்த போவதாக தகவல் வெளியாகியது. இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக தெலுகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். வம்சி தமிழில் ஏற்கனவே கார்த்தி, நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.

-விளம்பரம்-

படத்தின் கதை இது தானா :

மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் எரோட்டோமேனியா ( Erotomania) நோய் பின்னணியில் எடுக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார்.

படத்தில் இணைந்த பிரபலங்கள் :

கடந்த சில தினங்களாகவே இந்த படத்தில் இணைந்த பிரபலங்கள் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு அள்ளி வீசி வருகின்றனர். இந்த படத்தில் யோகி பாபு, ஷியாம், சரத்குமார், நாசர், ஸ்ரீகாந்த், சங்கீதா, சுதா, பிக் பாஸ் சம்யுக்தா என்று பலர் கமிட் ஆகி இருக்கின்றனர். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது விஜய் படமா இல்லை விக்ரமன் படமா என்று கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் :

மேலும், பல விதமான மீம்களை போட்டு பங்கமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர். ஏற்கனவே இந்த படம் குறித்து பேசிய வம்சி ‘வழக்கமான விஜய் படத்தை விட இந்த படம் கொஞ்சம் வித்யாசப்படும், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்’ என்று கூறி இருந்தார். தற்போது இந்த படத்தின் நடிகர்கள் விவரங்களை வைத்து பார்க்கும் போது இந்த படம் தெலுகு படத்தை போல ஒரு பக்கா பேமிலி செண்டிமெண்ட் படமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement