பத்தாம் வகுப்பில் தளபதி விஜய் எடுத்திருக்கும் மார்க் பட்டியல் தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்த எஸ் ஏ சந்திரசேகரின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் அவர்கள் முதன் முதலாக வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரை உலகில் அறிமுகமாகி இருந்தார்.
அதற்குப் பிறகு இவர் தன்னுடைய தந்தை இயக்கிய சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவு வெற்றி கொடுக்கவில்லை என்றாலும் விடாமுயற்சியுடன் விஜய் போராடி இருந்தார். அதற்குப்பின் விஜய் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மாஸ் காட்டி இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகின் நம்பிக்கை தூணாக விஜய் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருந்தது.
விஜய் திரைப்பயணம்:
இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மேனன், அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் வசூல் ரீதியாக சாதனை படைத்து இருந்தது. மேலும், லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். தற்போது கோட் படத்தினுடைய படப்பிடிப்பு முடிய இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் படம்:
இதை அடுத்து விஜய் அவர்கள் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க வருகிறார். இதுதான் இவருடைய கடைசி படம். இந்த படத்திற்கு பிறகு விஜய் அவர்கள் அரசியலில் முழு தீவிரமாக இறங்க இருக்கிறார். சமீபத்தில் தான் இவர் தமிழக வெற்றி கழகம் என்று தன்னுடைய கட்சிக்கு பெயர் வைத்திருந்தார். இதனால் முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலக இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.
விஜய் அரசியல்:
அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு அளித்து இருந்தார். அதேபோல் இந்த வருடமும் வருகிற ஜூலை மாதம் மாணவர்களுக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் தளபதி விஜயின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியில் தான் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
விஜய் 10ம் மதிப்பெண் பட்டியல்:
அதில் அவர் 1100க்கு 711 மதிப்பெண்களை எடுத்து இருக்கிறார்.
தமிழ்- 155/200
ஆங்கிலம்- 133/200
கணிதம்-95/200
அறிவியல்-206/300
சமூக அறிவியல்-122/200