தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவில் விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ், சாந்தனு, சேத்தன்,கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ், ஷோபா, சந்திரசேகர், அனிருத் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் அவர்கள் நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார்.

Advertisement

மேலும், இந்த விழாவில் பேசிய தளபதி முதலில் தனது ரசிகர்களுக்கு மன்னிப்பை தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார் அதற்கு முக்கிய காரணமே இந்த இசை நிகழ்ச்சி விழாவில் ரசிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. மேலும் அதற்கான காரணத்தையும் கூறினார். அதில் ரசிகர்கள் இந்த விழாவில் அனுமதிக்கப்படாத இதற்கு காரணம் பிகில் படத்தின் இசை வெளியீட்டின் போது அந்த விழாவிற்கு வெளியே நடந்த பிரச்சனையும் கொரானா வைரஸ் பயம் தான் காரணம் .

உங்களின் அனைத்து ஆதரவுக்கும் நன்றி மேலும் ரசிகர்களை அழைக்க முடியாது என்பதில் உங்களுக்கு எவ்வளவு வருத்தமோ அதே வருத்தம் எங்களுக்கும் இருக்கிறது என்று கூறினார். மேலும், இந்த விழாவில் ஹைலைட் பேச்சாக பார்த்தால், என்னுடைய படத்தில் ஒரு பாடல் வரும் நீ நதி போலே ஓடிக்கொண்டு இரு நம்மை பிடிக்காதவர்கள் நம் மீது கல் எறிவார்கள். அவர்களை சிரிப்பாலேயே கொல்ல வேண்டும். நம்ம வேலையை நாம் செய்து கொண்டே போக வேண்டும்.

Advertisement

உண்மையாக இருக்க வேண்டும் எனில் சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டும். நண்பர் அஜித் மாதிரி இந்நிகழ்வுக்கு கோட் ஷூட் போட்டு வந்திருக்கிறேன். நன்றாக இருக்கிறதா? விஜய் சேதுபதி எனக்கு பெயரில் மட்டும் இடம் கொடுக்கவில்லை, மனதிலும் இடம் கொடுத்துள்ளார்” என்றார். இந்த நிலையில் விஜய் பேசிய இந்த முழு வீடியோவை தற்போது சன் நிறுவனம் தனது யூடுயூப் பகிர்ந்துள்ளது.

Advertisement
Advertisement