விசுவாசம் படத்தில் அஜித்துக்கு தாய் மாமன் இந்த காமெடி நடிகரா.? யார் தெரியுமா..? புகைப்படம் இதோ

0
903
visvasam
- Advertisement -

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா கை கோர்க்கும் நான்காவது படம் “விசுவாசம் “. இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வந்துகொண்டு இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை என்னவென்று ஒரு சில தகவல்கள் பரவி வருகிறது.

-விளம்பரம்-

visvasam

- Advertisement -

இயக்குனர் சிவா, அஜித்தை வைத்து எடுத்த வீரம், வேதாளம் போன்ற படங்கள் ஹிட்டாகி இருந்தது. ஆனால் இவர்கள் இருவர் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த “விவேகம்” படம் ரசிகர்கள் மத்தியில் சற்றும் ஏமாற்றத்தையே தந்தது.

இருப்பினும் நடிகர் அஜித் குமார், இயக்குனர் சிவா மீது நம்பிகை வைத்து “விசுவாசம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதை அண்ணன், தம்பி பாசத்தை பற்றியது என்றும் ,அத்துடன் சேர்த்து நியூட்ரிநோ பிரச்னை பற்றி கூறும் ஒரு சமூக கருத்தும் இந்த படத்தில் அடங்கியுளது என்று சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

-விளம்பரம்-

thambi ramiyya

இந்த படத்தில் காமெடியனாக நடிகர் ரோபோ ஷங்கர் நடிக்கிறார் என்று தகவல்கல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் மற்றுமொரு காமெடியனாக நடிகர் தம்பி ராமையா நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் அஜித்திற்கு தாய் மாமனாக நடிக்கிறார் என்று டோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement