அஜித்துக்காக விசுவாசம் படத்தில் பாடிய காமெடி நடிகர்.! யார் தெரியுமா.?

0
194
Ajith

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் “விசுவாசம்” படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். அதுபோக இந்த படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா என்று பல காமெடி நடிகர்களின் பட்டாளமே நடித்துள்ளார்கள்.

ajith

இந்த படத்தில் நடித்துள்ள காமெடி நடிகரான தம்பி ராமைய்யா தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். தற்போது இந்த படத்தில் பாடகராகவும் அவதாரமெடுத்துள்ளாராம். இமான் இசையைத்துள்ள இந்த படத்தில் நடிகர் தம்பி ராமையா ஒரு பாடலை பாடியுள்ளாராம்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் தம்பி ராமையா, இந்த படத்தில் நடித்தது குறித்து தெரிவிக்கையில் ‘அஜித்துடன் நான் ஏற்கனவே ‘வீரம்,வேதாளம்’ போன்ற படங்களில் இரண்டாம் பாதியில் மட்டும் நடித்திருந்தேன். ஆனால், இந்த படத்தில் அஜித்துடன் படம் முழுக்க நடித்துள்ளேன். அதுபோக இந்த படத்தில் நான் ஒரு பாடலையும் பாடியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Thambi Ramaya
மேலும், இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் தம்பி ராமைய்யா , நடிகர் அஜித்தின் தாய் மாமனாக நடித்துள்ளார் என்று ஏற்கனவே தகவலைகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் நடிகர் தம்பி ராமையாவிற்கும் இந்த படத்தில் இரட்டை வேடம் என்றும் கூறப்படுகிறது