சினிமாவைப்பொறுத்தவரை நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விடுவது ஒன்றும் புதிதான ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் திருமணத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்த நடிகை பானுவும் ஒருவர். மலையாள திரையுலகில் 2005-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘ஒட்ட நாணயம்’. இந்த படத்தினை இயக்குநர் சுரேஷ் கண்ணன் இயக்கியிருந்தார்.
இதில் டினு டென்னிஸ், ப்ரியாமணி, ஹரிஸ்ரீ அசோகன், முக்தா, சலீம் குமார் ஆகியோர் கதையின் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது தான் நடிகை முக்தா அறிமுகமான முதல் மலையாள திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் ‘அச்சன் உறங்காத வீடு’ என்ற படத்தில் நடித்தார் நடிகை முக்தா.தமிழில் 2007-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘தாமிரபரணி’. இது தான் நடிகை முக்தா தமிழில் அறிமுகமான முதல் த திரைப்படம்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. தமிழ் திரையுலகிற்காக முக்தா தனது பெயரை பானு என மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ‘தாமிரபரணி’ படத்துக்கு பிறகு தமிழில் ‘ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், மூன்று பேர் மூன்று காதல், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாய்மை, பாம்பு சட்டை’ என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார் முக்தா.
மேலும், மலையாளம் மற்றும் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பான சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார் முக்தா. 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி நடிகை முக்தா, ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கியாரா என்ற மகள் உள்ளார். சமீபத்தில் இவரது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதோ அவரின் மகள்.