சூரியா – கீர்த்தி சுரேஷ் மற்றும் ரம்யா கிருஷ்னன் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளிவந்த படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தில் அதிகாரத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்து, ‘சொடக்கு’ என்ற பாடல் அமைக்கப்பட்டிருக்கும்.

Advertisement

‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற இந்த பாடலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதிகார வர்கத்திற்கு இந்த பாடல் பிடிக்கவில்லை. ஆளும் அரசை கிண்டல் செய்வது போல் இருக்கிறது.

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு போடுது.

Advertisement

Advertisement

அடி வயித்துல அடிக்கிறவன எதித்து கேக்கணும்,…

கொழுத்து கொழுத்த எலிய
கொழுப்ப குறைகனும்…

அடக்க அடக்க கதவ
ஒடச்சு திறக்கணும்…

உன்ன வெரட்டி.. வெரட்டி வெளுக்க தோணுது…
அதிகார திமிர.. பணக்கார பவர ..
தூக்கி போட்டு மிதிக்க தோணுது…

என இதுபோன்ற பாடல் வரிகள் அமைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இதில் சில வரிகைளை நீக்க வேண்டும் எனவும் கோரி இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகளுக்கு தமிழ் தெரியாததால் இந்த பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தர வேண்டும். அதன்பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

Advertisement