தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை குழந்தை நட்சத்திரங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. பேபி ஷாலினி துவங்கி பேபி சாரா பேபி அனிகா வரை எண்ணற்ற குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். மேலும், குழந்தை நட்சத்திரமாக இருந்த எல்லாம் தற்போது அடையாளம் தெரியாத அளவு வளர்ந்து விட்டார்கள் அந்த வகையில் தங்க மீன்கள் சாதனாவும் ஒருவர்.
தமிழில் தரமான மற்றும் வித்தியாமான படங்களை கொடுப்பதில் இயக்குனர் ராமும் ஒருவர். கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆம் அதன் பின்னர் தங்கமீன்கள் தரமணி பேரன்பு போன்ற வெற்றிப்படங்களை இயக்கி இருந்தார் இவர் இயக்கிய தங்க மீன்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாதனா இந்த படத்திற்கு இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்பதற்கான தேசிய விருதும் கிடைத்தது.
தங்கமீன்கள் படத்திற்கு பின்னர் இவர் மீண்டும் ராம் இயக்கிய பேரன்பு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திலும் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது நடிகையாக மட்டுமல்லாமல் தேவர் பாடல் மற்றும் நடனத்திலும் சிறந்தவராக விளங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சாதனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் சாதனா கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வீடியோ ஒன்றை வெளியுள்ளார். ஹாலிவுட் படத்தில் வரும் பிங்க் பேந்தர் தீம் மீயூசிக்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ கொரோனா வைரஸுக்கு பயப்படும் பேந்தர் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார்.