கோடிகளில் உருவாகும் முன்னணி நடிகர்களின் படங்களில் எல்லாம் ஒன்றுமே இல்லை இயக்குனர் தங்கர் பச்சன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக இருப்பவர் தங்கர் பச்சன். இவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். மேலும், இவர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர்.

இவர் அழகி, சொல்ல மறந்தகதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் என பல திரைப்படங்களை இயக்கியும் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பார்த்திபன், சேரன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இவருடைய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இவர் எப்பவுமே எதார்த்தமான கிராமப்புற கதைகளை மையமாக கொண்டு தான் படம் இயக்குவார்.

Advertisement

தங்கர் பச்சன் திரைப்பயணம்:

அந்த வகையில் தற்போது இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்த படம் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தை இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகி பாபு, எஸ் ஏ சந்திரசேகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தந்தை-மகனுக்கு இடையேயான பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட படம்.

தங்கர் பச்சன் அளித்த பேட்டி:

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வைரமுத்து இந்த படத்திற்கு பாடல்களை எழுதி இருக்கிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இதில் இயக்குனர் தங்க பச்சன் கூறி இருப்பது, மக்கள் நல்ல சினிமாவை விரும்பி பார்க்க வேண்டும். அதற்கு ஆதரவும் கொடுக்க வேண்டும். இப்போதெல்லாம் 200, 300, 500 கோடி என்று அதிக பொருள் செலவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தில் எல்லாம் ஒன்றுமே இல்லை. இருந்தாலும், அந்த படத்தை மக்கள் சென்று பார்க்கிறார்கள்.

Advertisement

இன்றைய படங்கள் நிலை:

அந்த மாதிரியான படங்களை தான் மக்களும் பார்க்க தயாராக இருக்கிறார்கள். இன்று எடுக்கப்படும் பல படங்கள் துப்பாக்கி, கத்தி, கொலை, ரத்தம், வன்முறை என்று அதிகமாக இருக்கிறது. உயிரைக் கொள்வது தற்போது சாதாரணமாக ஒன்றாகிவிட்டது. இதை பார்த்து வளரும் குழந்தைகளோட மனநிலையும் எப்படி இருக்கும்? இன்றைய படங்களில் அன்பு, பாசம், உயிர்கள் மேல் நேசம் இதையெல்லாம் குறைவாக தான் காண்பிக்கிறார்கள். இன்றைய மக்களுக்கும் குழந்தைகளுக்கும் அன்பை அதிகமாக கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

Advertisement

நல்ல சினிமா குறித்து சொன்னது:

படத்திற்கு வசூலாகும் பணத்தை மட்டும் வைத்து என்ன செய்வது? இந்த மாதிரியான படங்கள் சில மாதங்களில் காணாமல் போய்விடும். வணிகரீதியான வெற்றி மட்டுமே சினிமாவிற்கு போதாது. ஒரு திரைப்படம் காலம் கடந்தும் மக்கள் மத்தியில் நிற்க வேண்டும். ஒவ்வொரு கலைஞருக்கும் அந்த ஒரு கடமை இருக்கிறது. சமூகத்தைப் பற்றி ஒரு அக்கறை இருக்கிறது. இப்படிப்பட்ட படங்களுக்கு இடையே ஒரு நல்ல படத்தை அதுவும் சிறிய பட்ஜெத்தில் உருவான படத்தை பல தடைகளை கடந்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது ரொம்ப கடினமாக இருக்கிறது. இன்றும் என் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ரொம்ப கஷ்டப்படுகிறேன். எனக்கு எல்லாம் கொடுத்தது இந்த மக்கள் தான். அவர்களுக்கு நான் நல்ல படத்தை கொடுக்க வேண்டும். பணம் மட்டும் வந்தால் போதும் என்று அந்த மக்களை நான் கெடுக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement