சினிமாவிலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவும் பல சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் நட்சத்திரங்கள் பலரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக வாழ்ந்து வருகின்றனர் என்பது பலரும் அறிந்த ஒன்றே. சிலரை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மிகவும் பிரபலமான சிரியலான சரவணன் மீனாட்சியில் நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீஜா, ராஜா ராணியில் சீரியலில் நடித்த சஞ்சீவி மற்றும் ஆலியா மானஸ போன்றவர்கள் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு ஜோடியாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
தவமாய் தவமிருந்து சீரியல் :
இந்நிலையில் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வந்த பிரிட்டோ மற்றும் சாந்தியதா நிஜத்தில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஜி டிவியில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து சீரியல் முற்றிலும் வித்தியாசமானது. இந்த சீரியல் ஒரு குடும்பத்தில் தாய், தந்தை இருவரும் பிள்ளைகளால் படும் கஷ்டத்தை மையமாக கொண்டு கதையாக்கப்பட்டுள்ளது. இந்த சிரியலில் மார்கண்டேயனாக வரும் கதாபாத்திரம் குடும்ப தலைவராகவும், அவருடைய மனைவி சீதா குடும்ப தலைவியாகவும் இருந்து வருகின்றனர்.
சீரியல் ஜோடிகள் :
இப்படியிருக்கும் போது இவர்களுடைய குழந்தைகள் ரவி, ரேவதி, மலர், ராஜா என நாங்கு பேர் உள்ளனர். இவர்களில் மலர் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்களுக்குள் உறவு நன்றாகா சென்று கொண்டிருந்த நேரத்தில் பாண்டி மற்றும் மலர் இடையே சண்டை ஏற்படுகிறது. இவர்களை சேர்ந்து வைக்க மார்க்கண்டேயன் முயற்சி செய்கிறார். மார்கண்டேயனுக்கு மிகவும் பிடித்த மருமகனாக பாண்டி உள்ளார்.
நிஜத்திலும் ஜோடியாகின்றனர்
இப்படி சீரியலில் ஜோடிகளாக இருக்கும் பண்டி என்கிற பிரிட்டோ மற்றும் மலர் என்கிற சந்தியா இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகளாக மாற உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்கள் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இருந்த நிலையில் தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
நிச்சயதார்தம் :
இந்த காதல் வீட்டாருக்கு தெரியவே அவர்கள் முறைப்படி பேசி திருமணம் செய்ய நிச்சயதார்தம் நடக்க உள்ளதாக தகவல் சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. இப்படி பட்ட நிலையில் தான் கடந்த ஜனவரி 25ஆம் தேதி இருவருக்கும் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டதாக பிரிட்டோ மற்றும் சந்தியா இருவரும் அவர்களது சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை பதிவிட்டிருந்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.