நான் காதலிப்பதாக கூறப்பட்ட அந்த நடன இயக்குனர் என் தம்பி போன்றவர் – சின்னத்திரை நடிகை ஆவேசம்

0
1872
myna

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கேரக்டரில் நடித்தன் மூலம் பிரபலம் ஆனவர் சீரியல் நடிகை நந்தினி. இவரும் ஜிம் மாஸ்டர் ஒருவரின் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

nandhini2

அதன் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நந்தினியின் கணவர் இறந்துவிட்டார். அவரது இறப்பு குறித்து பல சர்ச்சைகள் இருக்கும் வேளையில் புதிய சர்ச்சை ஒரு வந்தது.

மைனா தற்போது நடித்து வரும் ஒரு சீரியலில் உடன் நடிக்கும் திருமணம் ஆன நடனஇயக்குனருடன் காதலில் இருப்பதாக செய்திகள் வந்தது. மேலும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கூறப்பட்டது.

nandhini2

இந்நிலையில் இது குறித்து வாய் திறந்துள்ளார் மைனா,

அவர் என் தம்பி போன்றவர், தம்பியுடன் எங்காவது வெளியில் சென்று வந்தால் கூட இப்படித்தான் பேசுவீர்களா. அப்படி பார்த்தால் உங்களது பார்வை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நீங்கள் தான் தெரிந்துகொள்ள வேண்டும்.
என அந்த வீடியோவில் பேசி இருந்தார் நந்தினி.