ஜெண்டில் மேன்,சூர்யன் என்று ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர் – விஜய்யின் படங்களால் ஏற்பட்ட நஷ்டம்

0
581
suryan
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜென்டில்மேன். இந்த படத்தின் மூலம் தான் சங்கர் அவர்கள் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், சரண்ராஜ், வினித் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.இந்த படம் அந்த ஆண்டுகளில் வெளிவந்த இந்திய படங்களில் மிகவும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியும் அடைந்தது. இன்னும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணமானவர்கள் ஒருவர் தான் தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன். அதோடு இவருக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு. ஆரம்ப காலத்தில் கே. டி. குஞ்சுமோன் அவர்கள் திரைப்பட விநியோகஸ்தராக தான் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார்.

- Advertisement -

கே. டி. குஞ்சுமோன் திரைப்பயணம்:

அதற்குப் பிறகு மலையாளத்தில் மம்முட்டி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பல நடிகர்களின் வெற்றி படங்களை தயாரித்து உள்ளார். பின் 1991 ஆம் ஆண்டு பவித்ரன் இயக்கிய வசந்தகால பறவைகள் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்த சங்கரை வைத்து ஜென்டில்மேன் படத்தை தயாரித்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.

ஜென்டில் மேன் :

ஜெட்டில் மேன் படத்தின் இறுதி காட்சியின் போது இணயக்குனர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இப்படம் முதல் படம் என்பதினால் தயாரிப்பாளரின் விருப்பப்படி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை அமைத்தார் சங்கர். ஆனால் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதினால் கருத்து வேறுபாடு மறைந்தது. இதனை தொடர்ந்து காதலன் திரைப்படத்தில் இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் பிரபு தேவா, பவித்ரன், சரத்குமார், அரவிந்த, சங்கர் என பலருக்கும் திரைவாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்தார் தயாரிப்பாளர் குஞ்சுமோன்.

-விளம்பரம்-

மகனை வைத்து படம் :

பின்னர் சில கரங்களினால் சங்கருடனான நட்பு உடைந்த பிறகு தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை பிலிம்ஸ் இன்டெர்னஷனலில் இருந்து ஜென்டில்மேன் பிலிம்ஸ் ஆக மாற்றிக்கொண்டார். அதற்கு பின்னர் வந்த காதல் தேசம், சக்தி, நிலவே வா, ராட்சகன் போன்ற படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து. அதற்கு பிறகு கடைசி 2 படங்களில் விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால் விஜய்யுடைய அப்பாவிற்கும் இவருக்கும் ஏற்பட்ட கருது வேறுபாடு காரணமாக ஏன் வேறொருவர் மகனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும், என்று தன்னுடைய மகனையே கதாநாயகனாக முடிவு செய்தார் கே.டி.குஞ்சுமோன்.

தொடர் தோல்விகள் :

நடிகர்களை வைத்து படம் எடுக்கும்போதே அவ்வளவு செலவு செய்த அவர் தன்னுடைய மகனுக்காக அகல கால் வைத்தார். ஆனால் அந்த செயல் தான் பெரிய விபரீதத்தில் போய் முடிந்தது. கோடிஸ்வரன் திரைப்படம் பொருளாதார சிக்கல் காரணமாக வெளியாகவில்லை. அந்த பின்னர் என் இதயத்தில் நீ படத்தை அறிவித்து கிடப்பில் போடப்பட்டது, அதற்கு பிறகு பிரியங்கா த்ரிவேதியை வைத்து சுவாசம், சிம்புவின் தொட்டி ஜெயயா, ரீமேக் என பல முயற்சிகள் செய்தும் பலன் கிடைக்கவில்லை.

தோல்விக்கான காரணம் :

அதன் பின்னர் விஜய்யை வைத்து எடுத்த நிலாவே வா, என்றென்றும் காதல் படமும் பெரும் தோல்வியை ஏற்படுத்தியது. இவற்றையெல்லாம் விட தன்னுடைய மகன் நடித்த கோடீஸ்வரன் திரைப்படத்தில் அதிக பொருட்செலவு செய்த்தே பின்னர் படங்களை தயாரிக்க முடியாத பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லலாம். பல நடிகர்கள், இயக்குனர்கள் என பலரை அறிமுகம் செய்து வைத்த குஞ்சுமோன் தன்னுடைய மகனை திரையில் அறிமுக படுத்துவதில் தவறிவிட்டார். இந்த நிலையில் தான் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்க இருப்பதாகவும் படத்தை பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்

Advertisement