விஜய்யை வைத்து மீண்டும் இயக்கும் ஹிட் இயக்குனர்.

0
2512
mathesh2
- Advertisement -

விஜய்-62விற்கு முருகதாஸ் கூட்டணி உறுதியாகி படத்திற்கான ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் நடந்த கொண்டிருக்கிறது. படத்தின் சூட்டிங் ஜனவரி மாத இறுதியில் துவங்கி ஆகஸ்ட் மாதம் முடிவடையும் என தெரிகிறது.
vijayஇந்த படம் முடிந்ததும், அடுத்த படத்திற்காக மீண்டும் அட்லீயுடன் கூட்டணி வைக்க உள்ளதாக முன்னர் தகவல் வந்தது. ஆனால் அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் விஜயின் ‘மதுர’ படத்தை இயக்கிய இயக்குனர் மாதேஷ், தான் விஜயை அடுத்த படத்தில் இயக்க முயற்சி செய்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

அவருக்கான ஒரு கதை தயாராக உள்ளதாகவும், விஜயும் கதையை கேட்க ஆர்வமாக உள்ளதாகவும் கூறியுள்ளாளர் மாதேஷ்.

- Advertisement -

மாதேஷ், விஜயின் அப்பா சந்திர சேகரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர். மதுர கதையை கூறிய போது இது எனக்கு செட் ஆகுமா என சந்தேகத்துடன் இருந்த விஜயை நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தவர் மாதேஷ்.

-விளம்பரம்-

தற்போது த்ரிஷா நடித்துள்ள த்ரில்லர் படம் மோகினியை இயக்கியுள்ளார் மாதேஷ். விஜய் இந்த கதையை கேட்டு சரி என சொல்லும் பட்சத்தில் விஜய்-63க்கு மாதேஷ் இயக்குனராகளாம் என தெரிகிறது.

இதே போன்று தான்  அழகிய தமிழ் மகன்  பட இயக்குனர் தளபதி விஜயை கன்வின்ஸ் செய்து பைரவா என்ற படத்தினை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement