80ஸ்ஸில் வெள்ளி விழா கண்ட விஜயகாந்த் படத்தில் நாயகியாக வாய்ப்பு வந்தும் மறுத்துள்ள அனிதா குப்புசாமி. அவரே சொன்ன காரணம்.

0
469
vijayakanth
- Advertisement -

இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகராக வலம் வருபவர்கள் புஷ்பவனம் குப்புசாமி- அனிதா. இருவரும் தன்னுடைய நாட்டுப்புற இசையின் மூலம் ஒட்டு மொத்த நாட்டுப்புற மக்களின் மனதையும் கவர்ந்தவர்கள். அதுமட்டும் இல்லாமல் புஸ்பவனம் குப்புசாமி தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்று உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாக பாடினர்கள். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

-விளம்பரம்-

குப்புசாமி – அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள், வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இவர்கள் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்களையும் வழங்கி இருக்கிறார்கள். மேலும், அனிதா அவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து உள்ளார்.

- Advertisement -

புஷ்பவனம் குப்புசாமி – அனிதா பற்றிய தகவல்:

அதில் அவர் மாடித்தோட்டம், பூஜை அறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் இவரை சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். மேலும், இவர்களுக்கு பல்லவி, மேகா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். அதில் மூத்த மகளின் பெயர் பல்லவி. இவர் பல் மருத்துவராக பணி புரிகிறார். இரண்டாவது மகள் மேகா. பல்லவிக்கும் , ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது.

புஷ்பவனம் குப்புசாமி – அனிதா பேட்டி :

இந்நிலையில் புஷ்பவனம் அனிதா குப்புசாமி தம்பதியினர் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தனர். அந்த பேட்டியில் தங்களின் இத்தனை கால வாழ்க்கை முறை பற்றியும், தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அணிதா பேசுகையில் தனக்கு பலவிதமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து என்றும் ஆனால் தனக்கு நடிக்க பிடிக்காது என்பதால் மறுத்துவிட்டேன் என்று கூறினார்.

-விளம்பரம்-

வைதேகி காத்திருந்தாள் :

மேலும் பேசிய அனிதா புஷ்பவனம் கூறுகையில் “எனக்கு பல திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் வந்தன இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ஒரு நல்ல படத்தில் நடிக்க என்னிடம் கேட்டிருந்தார். இயக்குனர் ராதா மோகன் இயக்கிய “மொழி” படத்தில் பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடிக்க கேட்டிருந்தார்கள். அதே போல விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தன. அப்போது நான் நடிகை ரேவதி போன்றே உயரத்திலும் சாயலில் இருந்தேன்.

அப்பா மறுத்துவிட்டார் :

எனவே என்னுடைய அப்பாவிடம் வந்து நடிப்பதற்கு கேட்டனர். ஆனால் அப்பா மறுத்துவிட்டார். நான் நன்றாக நடனமாடுவதினால் என்னுடைய ஆசிரியர் நடிக்க சொன்னார்கள் ஆனால் நான் மறுத்துவிட்டேன். நான் தொடக்கத்தில் திரைப்படத்தில் பாட வேண்டும் என்றுதான் வந்தேன் ஆனால் தற்போது பாடவும், நடிக்கவும் பிடிக்கவில்லை என்று கூறினார். கடந்த 1984ஆம் ஆண்டு விஜயகாந்த் மற்றும் ரேவதி நடித்த “வைதேகி காத்திருந்தாள்” படம் விஜயகாந்த்துக்கு ரேவதற்கும் சினிமா திரையில் திருப்புமுனையாக இருந்த படம் என்று சொல்லலாம். அதோடு வசூலிலும் பெரிய ஹிட் அடித்து.

Advertisement