ரஜினி தன் பிறந்தநாளை ஏன் ரசிகர்களுடன் கொண்டாடுவதில்லை என்று தெரியுமா ?

0
2217
rajinikanth

1988 ஆம் ஆண்டு வரை ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை தன் ரகர்களுடன் தான் கொண்டாடுவார். ஆனால் 1988 ஆம் ஆண்டிற்கு பிறகு இது தொடரவில்லை, அதற்கான காரணத்தை பின்வருமாறு காண்போம்.

kamal-rajini

1988-ம் ஆண்டு டிசம்பர் 12-ம்தேதி போயஸ்கார்டனில் பிறந்தநாள் விழா பிரமாதமாக கொண்டாடப்பட்டது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு முன் ஏற்பாடுகள் பிராமதமாக செய்யப்பட்டன. ரஜினி வீட்டுக்கு வரும் ரசிகர்கள் வரிசையாக வருவதற்கு சவுக்கு கட்டைகளை கட்டிவைத்து ராணுவக் கட்டுப்பாட்டோடு ரசிகர்மன்ற நிர்வாகிகள் செயல்பட்டனர்.

rajini

ஒவ்வொரு ரசிகருடனும் போட்டோ எடுத்துக் கொண்டு அவர்களுக்கு தன் கையால் ஸ்வீட் – காரம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். ஆனால், சென்னைக்கு வந்து ரஜினியை சந்தித்துவிட்டு சேலத்துக்கு திரும்பியபோது சாலை விபத்தில் சிக்கி இரண்டு ரசிகர்கள் உயிரிழந்தனர். தனது ரசிகர்கள் இறந்த துயரமான சம்பவம் ரஜினியின் மனசுக்குள் காயத்தை ஏற்படுத்தின.

Rajini-kanmal

அதன்பின் தனது பிறந்தநாளன்று ரசிகர்களை சந்திப்பதை தவிர்க்க ஆரம்பித்தார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12-ம்தேதி அன்று தினசரி பத்திரிகைகளில் ‘நான் பிறந்தநாள் அன்று சென்னையில் இல்லை, ரசிகர்கள் என்னைத் தேடி வந்து ஏமாற வேண்டாம்’ என்று விளம்பரம் கொடுத்து வந்தார் ரஜினி.

தகவல்: ஜே.ஸ்.கே.கோபி