உதவ ஆளில்லாமல் உயிர் போகும் நிலையில் உள்ள பறவை முனியம்மா !

0
15167
Paravai Muniyamma
- Advertisement -

பரவை முனியம்மா என்ற பழம்பெரும்  நடிகையை நம்மில் பலருக்கும் தெரியும். ‘சாமி’ படத்தில் ஜோதிகாவின் பாட்டியாக வந்து ‘சிங்கம் போலே’ ‘மதுரை வீரார் தான்டி’ என்ற பாட்டின் மூலம் பிரபலமடைந்தவர் பாவரி முனியம்மா.
paravai muniyammaஅவர் நாட்டுபுறப்பாடகியாகவும் இருந்து வந்துள்ளார். நம்மில் பலர் அவரை சின்னத்திரையில் கூட கண்டிருப்போம்.மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரைச் சேர்ந்த முனியம்மா அடிப்படையில் ஒரு நாட்டுப்புற பாடகி. ஊர் திருவிழாக்களில் முனியம்மாவின் பாட்டுக்கு கூட்டம் அள்ளும்.

-விளம்பரம்-

சினிமாவில் பாடி ஆடி நடிக்கவே, ஒரு நடிகையாக, நாயகர்களுக்கு அம்மாவாக, பாட்டியாக கொண்டாடினார்கள்.இப்படி சிரிப்பு, பாட்டு, நடிப்பு என்று உற்சாகமாக இருந்த முனியம்மாவை வெளி நாட்டு தமிழர்களும் அழைத்து பாட வைத்து ரசித்தார்கள், கொண்டாடினார்கள்.

- Advertisement -

சின்னத்திரை சமையல் ஒரு பிரபல தொலைக்காட்சியிலும் வாரம் தோறும் சமையல் குறிப்பு வழங்கி அசத்தினார். அம்மியில் பாடிக்கொண்டே அரைத்து ருசிக்க ருசிக்க சமையல் கற்றுத்தருவார் பரவை முனியம்மா.
Paravai Muniyamma
வறுமையில் வாடும் முனியம்மா தற்போது வாய்ப்பு குறைந்து வறுமை சூழ்ந்து, வயோதிகம் தந்த நோயோடு தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் இப்போது இருக்கிறார் முனியம்மா.

ஏற்கனவே இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும் உதவிக்கு யாரும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
Paravai Muniyamma
தற்போது அவர் மீண்டும் தைராய்டு நோயால் கடும் அவதிப்பட்டு வருவதாகவும் அவரை அவரது மகளும் மருமகனும் தான் கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

-விளம்பரம்-

அவரது உறவினர்களால் கூட சரியாக அவரைப் பராமரிக்க இயலவில்லை. முதியோருக்குக் கிடைக்கும் உதவித்தொகையும் சரியாக கிடைப்பதில்லை அவருக்கு. நடிகர் சங்கம் மூலம் கிராமியக் கலைஞர்களுக்குக் கொடுக்கப்படு அங்கீகாரமும் சரியான உதவிதொகையும் கிடைத்தாலே அவருக்கு மிக உதவியாக இருக்கும் எனக் கூறுகின்றனர் அவருடைய  உறவினர்கள்.
Paravai Muniyamma
நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என அனைத்திலும் தன் ராஜியத்தைக் காட்டும்  விசால் அவர்கள் இவர் போன்ற கலைஞர்களுக்கு தாமாகவே முன்வந்து உதவலாம்

Advertisement