தமிழ் சினிமாவில் 100 ஆண்டுகளில் மற்ற படங்கள் செய்ய முடியாத சாதனையை செய்துள்ள வலிமை – என்ன தெரியுமா?

0
436
valimai
- Advertisement -

100 வருட தமிழ் சினிமாவில் வலிமை படம் மட்டுமே இந்த சாதனையைச் செய்திருக்கிறது என்று திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அளித்து உள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று உள்ளது. அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் சில தினங்களுக்கு முன் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். படத்தில் சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது.

- Advertisement -

வலிமை படம் பற்றிய தகவல்:

இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அஜித்துக்கு அடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹீமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். அதிலும் படத்தில் பஸ் பைட் தமிழ் சினிமாவிலேயே ஒரு மைல்கல் காட்சி என்று சொல்லுமளவிற்கு இயக்குனர் காண்பித்து இருக்கிறார். மேலும், வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

வலிமை படத்தின் முதல் நாள் வசூல்:

அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படம் கேரளாவில் வெளியாகி முதல் நாளில் 6.9 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் விஜய். விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கேரளாவில் வெளியாகி முதல் நாளில் 3.65 லட்சம் தான் வசூல் செய்தது. ஆனால், தற்போது வலிமை படம் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து முந்தி இருக்கிறது. இப்படி வலிமை படம் வெளியாகி கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு ‘வலிமை’ படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் வலிமை படம் செய்த சாதனை:

இந்நிலையில் 100 வருட தமிழ் சினிமாவில் வலிமை படம் செய்து உள்ள சாதனை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அஜித்தின் வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 900க்கும் அதிகமான திரையரங்களில் வெளியானதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் ஆகியோர் படங்கள் கூட 700 முதல் 800 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும். இந்த நிலையில் வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது.

தமிழக திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

இது கோலிவுட் திரையுலகில் ஆச்சரியப்படுத்தி இருக்கும் இந்த நிலையில் இது குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, தமிழ் சினிமா வரலாற்றில் 100 வருடத்தில் வலிமை படம் மட்டுமே 900க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் எல்லா பக்கமும் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisement