பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லரின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.
மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். மேலும், இந்த பாடல் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது.
பீஸ்ட் படத்தின் ட்ரைலர்:
அதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இருந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். ட்ரெய்லர் ஆரம்பத்தில் செல்வராகவன் கதை சொல்வது போல் காண்பிக்கிறார்கள். ஒரு மால்லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால் ஒன்றில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். அப்போது அரசாங்கத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. கடத்தப்பட்ட மாலில் தனது துறையை சேர்ந்த ஸ்பை வீர ராகவன் இருப்பதை அறிந்து அவரிடம் மால்லையும் மக்களையும் காப்பாற்றும் பொறுப்பை செல்வராகவன் ஒப்படைக்கிறார்.
பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் பற்றிய தகவல்:
இந்த கடத்தலில் இருந்து விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் சுவாரஸ்யமே. அதோடு தளபதி விஜயின் பீஸ்ட் படம் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். மேலும், பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் வெளியானதிலிருந்து சும்மா அதிர வைத்திருக்கிறது. இந்த ட்ரெய்லர் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் ரெக்கார்ட்ஸ்சையும் முறியடித்துள்ளது என்றே சொல்லலாம். சுமார் தற்போது வரை 2.1 மில்லியன் லைக்ஸ், 21 மில்லியன் வியூஸ் என பீஸ்ட் படத்திற்கு சோசியல் மீடியாவில் குவிந்த வண்ணம் உள்ளது.
திரையரங்குகளில் ரசிகர்கள் செய்த வேலை:
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சில திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று ஒளிபரப்பப்பட்டது. நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில் டிரெய்லர் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் குவிந்து இருந்தார்கள். அப்போது ஆர்வத்தில் ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடி, நாற்காலிகள் எல்லாம் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். நுழைவு வாயில் இருந்த ரசிகர்கள் முந்தியடித்து கொண்டு உள்ளே சென்றது போது கண்ணாடி உடைந்து இருக்கிறது. டிரெய்லரை பார்த்த உற்சாகத்தில் இருக்கைகள் மீது ஏறி ஆடி விசிலடித்து நாற்காலிகள் எல்லாம் உடைத்து நாசமாகி இருக்கிறார்கள்.
திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கை:
இந்த நிலையில் இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் ஆடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், இலவசமாக டிரைலர் வெளியிடும் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும். இதனால் பிரச்சனைகள் ஏற்படும்போது திரையரங்கு உரிமத்தை இழக்கக் கூடிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ட்ரெய்லருக்கே இப்படின்னா! மெயின் பிக்சருக்கு ரசிகர்களோடு ஆட்டம் என்னவோ? என்று நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.