கொரோனா பீதியால் இந்த ஊர்களில் உள்ள திரையரங்குகள் மூடல் . உங்க ஊர் லிஸ்ட் இருக்கா பாருங்க.

0
2396
corona
- Advertisement -

உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர அச்சுறுத்தல் விஷயமாக இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. உலகம் முழுவதும் உள்ள 25 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது என்று ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இது உலகில் பல இடங்களில் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கவலையில் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for theaters closed due to corona tamilmadfu

- Advertisement -

இந்த வைரஸ் பரவலை தடுக்க பிற நாடுகள் சீனாவுடன் கொண்ட போக்குவரத்து தொடர்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. மேலும், கரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். இதனால் திருமணம், விழா போன்ற பல நிகழ்ச்சிகளை தள்ளி வைக்க அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் சூட்டிங்கும், படம் வெளியீட்டுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Image result for கொரோனா வைரஸ் தமிழக திரையங்குகள் மூடல்

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் சினிமா வட்டாரத்தில் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தான் கேரளாவில் உள்ள தியேட்டர்கள் எல்லாம் மாநில அரசின் உத்தரவின் படி மூடப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் தியேட்டர்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி போன்ற பல மாவட்டங்களில் தியேட்டர்கள் மூடி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வருத்தத்தில் உள்ளார்கள்.

Advertisement