சூர்யா குடும்பம் மட்டும் வாழணும், 25,000 குடும்பங்கள் அழியணுமா – கொதிக்கும் திரையரங்க சங்கம்.

0
5721
surya
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. 2006-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. திருமணத்துக்கு பிறகும் ’36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி’ ஆகிய படங்களில் நடித்தார் ஜோதிகா. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகை ஜோதிகா நடித்திருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘அமேசான் ப்ரைம்’-யிற்கு ரூ.9 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : தன்னுடைய உடையை மகனுக்கும், மகன் உடையை தானும் போட்டு ஆட்டம் போட்ட வரலாறு பட நடிகை.

- Advertisement -

நடிகர் சூர்யா தயாரித்திருக்கும் இந்த படத்தினை ஜே.ஜே.ப்ரட்ரிக் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பார்த்திபன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன் ஆகியோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.4 1/2 கோடியாம். ஆனால், தயாரிப்பு நிறுவனத்திற்கு டிஜிட்டல் பிளாட்ஃபார்மிற்கு விற்றதால் அதிக லாபம் கிடைத்து விட்டதாம். தற்போது, இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளரும், சென்னையிலுள்ள ரோகினி தியேட்டரின் உரிமையாளருமான பன்னீர் செல்வம் பேசுகையில் “நடிகர் சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை டிஜிட்டல் பிளாட்ஃபார்மிற்கு விற்கப்பட்ட செய்தி வந்ததும், அந்நிறுவனத்தின் சிஇஓ ராஜசேகர் பாண்டியனுக்கு போன் செய்து ‘ஒரு வருடத்துக்கு பெரிய படங்கள் நான்கு மட்டுமே ரிலீஸாகும்.

அந்நான்கு படங்களை மட்டும் வைத்துக் கொண்டு வருடம் முழுவதும் திரையரங்குகளை இயக்க முடியாது. தியேட்டர்கள் சின்ன படங்களை நம்பித் தான் இருக்கிறது. நன்றாக யோசித்து முடிவெடுங்கள் தம்பி’ என்று கூறினேன். அதற்கு ராஜசேகர் பாண்டியன் ‘டிஜிட்டல் பிளாட்ஃபார்மிற்கு படத்தை கொடுத்து விட்டோம் சார். இனி நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது’ என்று பதில் சொன்னார். உடனே நான் ‘இனிமே உங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகும் அனைத்து படங்களையும் டிஜிட்டல் பிளாட்ஃபார்மிற்கே கொடுத்து விடுங்கள். தியேட்டரில் ரிலீஸ் செய்யவே வேண்டாம்’ என்று சொல்லி போனை கட் செய்து விட்டேன். பின், பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவும், திருப்பூர் சுப்ரமணியனும் எனக்கு போன் செய்து ‘வெயிட் பண்ணுங்க. நல்ல படியா பேசி பிரச்சனையை முடித்துக் கொள்வோம்’ என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-

அதற்கு நான் ‘அதுவரை டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருந்தால் பேசலாம். ஒரு வேளை ரிலீஸ் செய்து விட்டால் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை’ என்று கூறினேன். ‘கொரோனா’ பிரச்சனையால் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, தியேட்டர் உரிமையாளர்களும் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக நீங்கள் மட்டும் சம்பாதிச்சா போதும்னு நினைப்பது சரியா. படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து, சில நாட்கள் ஓடிய பிறகு டிஜிட்டல் பிளாட்ஃபார்மிற்கு கொடுங்கள்.

‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் சிஇஓ ராஜசேகர் கற்பூரபாண்டியனுடன் சூர்யா

இப்படி ஒரு சூழ்நிலையில் ஏன் கொடுக்கிறீர்கள். ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் சிஇஓ ராஜசேகர் பாண்டியனிடம் பேசுகையில் ‘தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என 25,000 நபர்களின் வாழ்வாதாரம் இதில் இருக்கிறது’ என்று நான் சொன்னேன். அதற்கு அவர் ‘எங்களுடைய வாழ்க்கையைத் தான சார் நாங்க பார்க்க முடியும்’ என்று சொன்னார். நடிகர் சூர்யாவின் ஒரு குடும்பம் மட்டும் சம்பாதிப்பதற்காக, 25,000 பேர் அழிந்து போக வேண்டுமா? இது என்ன நியாயம்?” என்று பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் சிஇஓ ராஜசேகர் பாண்டியன் பேசுகையில் “இதை பற்றி இப்போது எதுவும் கேட்காதீர்கள். இப்பிரச்சனை முடிவடைந்ததும் பேசலாம்” என்று தெரிவித்து விட்டார்.

Advertisement