ஆடையின்றி நடிக்கனும்னு எனக்கு தெரியாது, உண்மையில் நடந்தது இது தான் – மனம் திறந்த விடுதலை பட நடிகை.

0
2078
Viduthalai
- Advertisement -

விடுதலை படத்தில் நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து நடிகை தென்றல் ரகுநாதன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி படத்தில் போராளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, சேத்தன், தென்றல் ரகுநாதன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார். அதில் முதல் பாகம் தான் கடந்த வாரம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.

- Advertisement -

விடுதலை படம்:

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் மக்கள் வாழ்ந்து வரும் மலைப்பகுதியில் கனிம வளங்கள் நிறைய கிடைக்கிறது. இந்த கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. ஆனால், இந்த கனிம வளங்களை எடுக்கக்கூடாது என்று மக்கள் எதிர்த்து போராடுகின்றனர். இந்த போராட்டத்தின் தலைவனாக விஜய் சேதுபதி இருக்கிறார். பின் போலீஸான சூரி மக்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார்? மக்களின் இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

படம் குறித்த தகவல்:

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், படத்தைக் குறித்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் சூரி இனி நகைச்சுவை வேடங்களில் நடிப்பாரா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கிறது. காரணம், அந்த அளவிற்கு இவர் இந்த படத்தில் மிரட்டி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடித்தவர் நடிகை தென்றல் ரகுநாதன். இவர் படத்தில் ஆடை இல்லாமல் நிர்வாண காட்சியில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

நடிகை தென்றல் ரகுநாதன் அளித்த பேட்டி:

இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை தென்றல் ரகுநாதன் பேட்டி ஒன்றும் அளித்திருக்கிறார். அதில் அவர், விடுதலை படத்தின் படப்பிடிப்பு செங்கல்பட்டு பகுதியில் நடந்தது. ஒரு நாள் இரவு 7 மணி அளவில் நான் வெற்றிமாறன் சாரை சந்தித்து பேசினேன். பின் அவர் வந்துவிடுங்கள் என்று சொன்னார். ஆனால், வசனம் பேசுங்கள் என்று என்னை அவர் சோதனை செய்யவில்லை. மறுநாள் நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். இந்த படத்தில் முதலில் நடிக்கும் போது எனக்கு என்ன கதாபாத்திரம் என்று தெரியாது.

நிர்வாண காட்சி குறித்து சொன்னது:

இயக்குனர் வெற்றிமாறன் படம் என்பதால் இது குறித்து எனக்கு கேட்கவும் தோன்றவில்லை. படப்பிடிப்பு தளத்தில் தான் நான் காவல் நிலைய காட்சியில் ஆடைகள் இன்றி நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். அப்படி நடிக்கும் போது எனக்கு பயமும், தயக்கமும் ஏற்படவில்லை. நான் அங்கு பாதுகாப்புடன் இருப்பதாகவே தான் உணர்ந்தேன். உண்மைய சொல்ல வேண்டும் என்றால், படபிடிப்பில் நான் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக நடிக்கவில்லை. எடிட் செய்துதான் அதுபோல திரையில் காண்பித்து இருந்தார்கள். அதோடு இந்த படத்தில் என்ன கதாபாத்திரம் என்பது கூட எனக்கு தெரியாது. இந்த படத்தில் டப்பிங் பேசும்போது தான் நான் கதாநாயகியின் அம்மாவாக நடித்திருக்கிறேன் என்பது எனக்கு தெரிந்தது என்று கூறினார்.

Advertisement