கல்யாணத்துக்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மை இழப்பது தவறு இல்லை ! நடிகை சர்ச்சை பேச்சு

0
1350
yashika anandh

தமிழ் சினிமாவின் புதிய இரட்டை மொழி வசனத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ள இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து ” படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே அளவிற்கு இந்த படத்திற்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

Yaashika-Aanand

இளசுகள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், இந்த கால சமூகத்திற்கு ஒரு கேவலமான உதாரணமாக தான் இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்த ஹாசினி மற்றும் நந்தினி இருவரையும் நீங்கல்லாம் எல்லாம் பெண்ணே எல்லை என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் மீடியாவிற்கு பேட்டியளித்த நடிகை யாஷிகா ஆனந்த்.அந்த பேட்டி முழுக்க இரட்டை மொழி அர்த்தத்துடனே தான் பேசி இருந்தார். மேலும் பெண்களின் கன்னித்தன்மை பற்றி கேள்வி கேட்டதற்கு “ஒரு சில ஆண்கள் கூடத்தான் திருமணத்திற்கு முன் கன்னி தன்மையை இழக்கின்றனர். அதனால் பெண்களுக்கு மட்டும் என்ன விதி விளக்கா , அவர்களும் திருமணத்திற்கு முன்னர் கன்னி தன்மையை இழந்தால் ஒன்றும் தப்பில்லை ” என்று சர்ச்சையான பதிலை அளித்துள்ளார்.

Iruttu-Araiyil-Murattu-Kuthu

ஏற்கனவே இது போன்று பெண்களின் கன்னி தன்மை குறித்து பேசிய பிரபல நடிகை குஷ்பு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார். இந்நிலையில் ஏற்கனவே “இருட்டு அறையில் முரட்டு குத்து ” என்ற படத்தில் நடித்து ஒரு சில மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.