காதலியை கரம் பிடித்த தெருக்குரல் அறிவு – யார் தலைமையில் தெரியுமா? குவியும் வாழ்த்துகள்

0
25
- Advertisement -

பாடகர் அறிவுக்கு திருமணம் ஆகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராப் பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தெருக்குரல் அறிவு. இவர் பாடகர் மட்டும் இல்லாமல் பாடல் ஆசிரியரும் ஆவார். இவர் பா. ரஞ்சித் கூட்டத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த காலா படத்தில் உரிமையை மீட்போம் என்ற பாடலை எழுதி இருந்தார்.

-விளம்பரம்-

இதன் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின் இவர் விஜயின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெயிடு என்ற பாடலை எழுதி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் தனுஷ், ஜீவா உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் பாடகராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

- Advertisement -

தெருக்குரல் அறிவு திரைப்பயணம்:

இன்னொரு பக்கம் இவர் நிறைய ஆல்பம் பாடல்களை எழுதி இருக்கிறார். அந்த வகையில் இவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணணின் மகளும் பிரபல பாடகியுமான தீ உடன் சேர்ந்து என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் 2021 ஆம் ஆண்டு யூடியூபில் வெளியாகி இருந்தது.
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தெருக்குரல் அறிவு பற்றிய தகவல்:

பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்கள். நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டு இருந்தது. இதுபோக அறிவு வெளிநாடுகளிலும் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். தற்போதும் இவர் படங்களில் பிஸியாக பயணித்து தான் வருகிறார்.

-விளம்பரம்-

தெருக்குரல் அறிவு காதலி:

இதனிடையே இவர் கல்பனா அம்பேத்கர் என்பவரை காதலிப்பதாக 2022 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார். ஆனால், அதற்குப் பிறகு இவர்களின் திருமணம் குறித்து எந்த ஒரு தகவலுமே வெளியாகவில்லை. கல்பனா அம்பேத்கர் அவர்கள் வருடம் வருடம் மார்கழியில் நடந்து வரும் ‘மார்கழியில் மக்கள் இசை’ என்ற கலைத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

தெருக்குரல் அறிவு திருமணம்:

இப்படி இருக்கும் நிலையில் இன்று தெருக்குரல் அறிவு – கல்பனா அம்பேத்கர் இருவருக்குமே திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுடைய திருமணம் சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இளையராஜா ஸ்டியோவில் இளையராஜா தலைமையில் நடந்து இருக்கிறது. பின் இவர்கள் விசிக தலைவர் மற்றும் எம்பி திருமாவளனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றிருக்கின்றார்கள். இவர்களுடைய திருமண புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement