பொதுவாகவே சினிமா படங்களில் நடக்கும் பல விஷயங்கள் நிஜ வாழ்க்கையிலும் நடப்பது வழக்கமான ஒன்று. ரசிகர்கள் எல்லோரும் நடிகர், நடிகைகளைப் போல நடனம் ஆடுவது, பேசுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், படங்களில் நடக்கும் பல விஷயங்கள் நிஜ வாழ்க்கையிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தில் நடந்து போல் நோய், காப்பான் படத்தில் நடந்தது போல் வெட்டுக்கிளி சேதம், சுனாமி நிகழ்வு போன்ற பல நிகழ்வுகள் எதேச்சையாக நிஜத்திலும் மக்களின் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கலகலப்பு படத்தில் நடந்த சம்பவம் தற்போது நிஜ வாழ்க்கையிலும் நடந்திருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் கலகலப்பு. இந்த படத்தை குஷ்பூ தயாரித்திருந்தார். இந்த படத்தில் விமல், சிவா, ஓவியா, அஞ்சலி உட்பட பலர் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் சிவா அவர்கள் ரகு என்ற கதாபாத்திரத்தில் திருடனாக நடித்திருப்பார்.

இதையும் பாருங்க : ஒரு பேட்டியில் கூட Wig இல்ல, திரையில் மட்டுமே மேக்கப், சில பேரும் இருக்கானுங்களே – கேலி செய்த ரஜினி ரசிகர்கள். விஜய் ரசிகர்கள் பதிலடி.

Advertisement

கலகலப்பு படத்தில் சிவா செய்தது:

அப்போது ஒரு வீட்டில் சிவா திருடிவிட்டு சுவற்றின் ஓட்டை வழியே தப்பிக்கும் போது மாட்டிக் கொள்வார். உடனே மக்கள் அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்து விடும். தற்போது அதே பாணியில் ஆந்திராவில் நடந்துள்ள சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுஎன்னவென்றால், ஆந்திராவில் அம்மன் கோவிலில் நகைகளை திருடிய திருடன் சுவற்றில் ஓட்டை வழியாக வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்ட சம்பவம் தான்.

பட பாணியில் ஆந்திர கோவிலில் திருட்டு:

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அம்மன் கோயில் ஒன்று உள்ளது. ஜாடு புடி கிராமத்தில் அமைந்துள்ள கிராமத்து தேவதையான அம்மன் கோவிலில் பாப்பாராவ் என்ற இளைஞன் சுவற்றில் உள்ள ஓட்டை வழியே உள்ளே சென்று இருக்கிறார். அங்கு அம்மன் அணிந்து இருந்த நகைகளை திருடி இருக்கிறான். பின் திருடிய நகைகளை எடுத்து கொண்டு வந்த சுவற்றின் ஓட்டை வழியாக வெளியேற முயன்றான்.

Advertisement

சுவற்றில் சிக்கிய திருடன்:

அப்போது பாதி தூரத்தில் வந்த அவனால் வெளியேற முடியாமல் சுவற்றினுள் சிக்கி கொண்டான். பாதி உடல் கோவிலுக்கு வெளியிலும், மீதி உடல் கோவிலுக்கு உள்ளேயும் சிக்கி கொண்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று திருடனை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அந்த திருடன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement