தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. பீஸ்ட் படம் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். பொதுவாக விஜய் படங்கள் என்றாலே ரிலீசுக்கு முன்னர் இசை வெளியிட்டு விழா ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்க்கப்படும்.அதுவும் இசை வெளியிட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்கவே அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துகொண்டு இருப்பார்கள். இந்த முலையில் பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என்று அறிவிப்பு வெளியானது.
விஜய்யின் புதிய லுக் :
இருப்பினும் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் கலந்து கலந்து கொள்ள இருக்கிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து டிவி நிகழ்க்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதால் விஜய் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதற்காக அடுத்தடுத்த ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய் இந்த வயதிலும் இளமையாக இருக்கிறார் என்று பலர் பாராட்டினாலும, ஒரு சிலரோ விஜய் இந்த லுக்கில் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.
கேலி செய்த ரஜினி ரசிகர்கள் :
அதிலும் பல விஜய் ரசிகர்களே விஜய் இந்த லுக்கில் ஒரு மாதிரி தெரிகிறார். அவரது முகத்தை விட அவரது முடி பெரிதாக தெரிவிதால் இந்த லுக் ஏதோ எடிட் செய்யப்பட்டது போலவும், கிரீன் மேட் பயன்படுத்தி Vfx செய்தது போல இருக்கிறது என்று விஜய் ரசிகர்களே கூறி வருகின்றனர். விஜய்யின் முதல் படம் துவங்கி தற்போது வரை அவரது உருவத்தை பற்றிய பல விமர்சங்கள் எழுந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும் சமீப காலமாக நடிகர் விஜய் பல்வேறு படங்களில் ஒரிஜினல் முடி வைத்து நடிக்கவில்லை என்ற பல கேலி கிண்டல் இருக்கத்தான் செய்து வருகிறது.
பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள் :
இப்படி ஒரு நிலையில் விஜய்யின் தோற்றத்தை ரஜினி ரசிகர்கள் சிலரும் கேலி செய்ய துவங்கி இருக்கின்றனர். அதிலும் ஒரு ரசிகர், ரஜினி அளித்த பேட்டியின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பேட்டியில் ரஜினி wig வைப்பது இல்லை. திரையில் மட்டுமே Makeup சில பேர் இருக்கானுங்களே என்று விஜய்யை மறைமுகமாக கேலி செய்து இருந்தனர். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன.
அண்ணாமலை ஆடியோ லான்ச் :
ரஜினி, அண்ணாமலை பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய வீடியோக்களை பகிர்ந்து. அதில் ரஜினி விக் வைத்து இருந்தார் என்று கேலி செய்து வருகின்றனர். அதே போல மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அந்த படத்திற்காக விஜய் முடி வளர்த்தது குறித்தும், விஜய்யின் ஒரிஜினல் ஹேர் ஸ்டைல் குறித்து பேசிய வீடியோக்களையும் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து ரஜினி ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளனர்.