பா மா க- க்கு இதான் வேலை – ET க்கு ஆதரவு தெரிவித்த திருமாவளவன்

0
433
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-
surya

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யப் போகும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இன்று வெளியா கி உள்ளது. ஆனால், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிட கூடாது என்று அரசியல் கட்சியினர் பலர் போராட்டம் செய்கிறார்கள். கடந்த வருடம் வந்த ஜெய் பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் வன்னியர்களை ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று காட்டப்பட்டுள்ளதாக பாமக கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

- Advertisement -

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தடை கோரிக்கை:

அது மட்டுமில்லாமல் பல வன்னியர் சங்கத்தினர் ஜெய் பீம் படத்திற்கு எதிராக கோஷங்களை செய்திருந்தார்கள். இதனால் படக்குழுவினர் அந்த காட்சியை படத்திலிருந்து மாற்றிவிட்டனர். இருந்தும் இந்த பிரச்சினையின் காரணமாக தற்போது தங்களிடம் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக கட்சி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து மாவீரன் மஞ்சள் படை தலைவர் ஜெ குரு கனலரசன் அவர்கள் எதற்கும் துணிந்தவன் படம் வெளியிட கூடாது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பாமாக கட்சியின் அராஜகம்:

பின் கரூர் மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் பிரேம்நாத் கரூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் இடம் நேற்று மனு அளித்தார். அதுமட்டும் இல்லாமல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சரவணா திரையரங்கில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிட இருந்தது. அந்த நேரத்தில் பாமகவினர் அங்கு சென்று அராஜகம் செய்ததால் அந்தப் படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டது என்று தியேட்டர் நிர்வாகம் தெரிவித்தது. இப்படி பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் சூர்யாவின் படம் வெளியானது.

-விளம்பரம்-

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:

இந்த நிலையில் பாமகவின் இந்த செயல் முற்றிலும் அரசியல் ஆதாயம் தேடுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், இது கவனிப்பிற்கு செய்யப்படுகிற ஒரு அரசியல் ஆகத்தான் தெரிகிறது. நடிகர் சூர்யாவை பொறுத்தவரை ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு 10 ஆண்டுகளாக ஏராளமான பணிகளை ஆற்றி வருகிறார்.

சூர்யாவை நினைத்து வருத்தம் படும் திருமாவளவன்:

ஜாதி மதம் மொழி உள்ளிட்ட வரம்புகளைக் கடந்து அனைத்து தரப்பினரின் நன்மதிப்பை பெற்று வளர்ந்து வருகிற, வளர்ந்த ஒரு திரை கலைஞர். அவருக்கு இத்தகைய அரசியல் நெருக்கடி கொடுப்பது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை? தொடர்ந்து இதுபோன்று கவனிப்பு அரசியலை செய்வது பாமகவின் வாடிக்கையாகிவிட்டது. இது வருந்தத்தக்க நிலைப்பாடாக இருக்கிறது. இதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement