யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்து முடிந்த சித்து– ஸ்ரேயா மெகந்தி ஃபங்ஷன் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த திருமணம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த தொடர் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் அறிமுகமானவர் சித்து. அந்த தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து மலர்ந்தது.
ஆரம்பத்தில் இவர்களுடைய காதல் குறித்து சோசியல் மீடியாவில் பல கேள்விகளும், கருத்துக்களும் எழுந்து இருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் அதற்கு மௌனமாகவே இருந்தனர். மேலும், திருமணம் சீரியல் மூலம் இவர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கிளப்புகள் தொடங்கியது. அதோடு சோசியல் மீடியாவில் இவர்களுடைய ஜோடி புகைப்படங்கள் தான் அதிகமாக வைரல் ஆகி இருந்தது. அதற்கு பிறகு தான் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் லிவிங் டுகெதரில் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளிவந்திருந்தன. தற்போது சித்து அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்ற ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். மேலும், எப்போது சித்து–ஸ்ரேயா கல்யாணம்? என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மெகந்தி பங்க்ஷன் நடைபெற்றிருந்தது.
அதற்கான புகைப்படங்கள் எல்லாம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த சித்து, ஸ்ரேயாவின் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நாங்கள் உங்களுடைய திருமண புகைப்படங்களை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றோம் என்று கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தங்கள் மெகந்தி ஃபங்ஷன் வீடியோவை இன்று ஆரம்பித்துள்ள தங்களின் புதிய யூடுயூப் சேனலில் பதிவிட்டுள்ளனர்.