உதயநிதிக்கு எழுந்த எதிர்ப்புகள் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் நடந்துள்ளது என்று திருமாவளன் கூறுகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரங்கள் மிகவும் பரப்பரப்பாக இருந்து வருகிறது. இதில் ஒரு தரப்பினர் அவர்களுடைய கருத்து கூற அதற்க்கு எதிரணியில் இருப்பவர் மற்றொரு கருத்தை கூற என பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தர்மாவை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

உதயநிதி பேசியது:

சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும் அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க்க முடியாது என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க்க வேண்டும் என்பது தான் இந்த கமினியூஸ்ட் இயக்கமும் இந்த திமுக இயக்கமும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் வகையில் ஒரு செய்தி தாளில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது.

Advertisement

அதற்க்கு தான் நீட் போன்ற தேர்வுகளை 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதிசன் வரை 21 மாணவர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம். மருத்துவ கட்டமைப்பில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருந்து வருகிறோம். இது வரை இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவர்களை உருவாக்கியது தான் தமிழ்நாடு. ஆனால் அதை சிதைக்கவேண்டும் என்று கொண்டு வந்தது தான் நீட் தேர்வு. சிலருக்கு நிச்சயம் வயிற்று எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். இந்த மாநாடுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் இங்கு பேசிவிட்டு அனைவரும் கலைந்து விடக் கூடாது. இங்கு பேசிய கருத்துகளை பொது மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். என்றும் அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார். அதற்கு ஆதரவு அளிக்கும் திருமாவளன் கருத்தை கூறியிருக்கிறார்.

திருமாவளவன் கூறியது:

சனாதனம் தொடர்பாக உதயநிதி பேசியதை வைத்து இந்திய கூட்டணியில் இருந்து திமுகவை பிளவுபடுத்த முடியாது விசிக தலைவர் தொல் திருமாவளவன். சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவர் கூறியது.  சனாதனம் தொடர்பாக அமைத்து உதயநிதி பேச்சை திரித்து பலரும் பேசிக் கொண்டு வருகின்றனர் இதுபோன்ற. இதுபோன்ற எதிர்ப்புகளை அம்பேத்கரும் பெரியாரும் சந்தித்துள்ளனர். அமைச்சர் உதயநிதி முன்வைத்து கருத்து சாதனத்தைஎதிர்க்க மட்டுமே ஹிந்துக்களை எதிர்க்க கிடையாது.

Advertisement

சமூகத்தில் மிகவும் பாலின சாதிய பாகுபாடு  நியாயப்படுத்துபவர்கள் இந்த சனாதன சக்திகள். இது போன்ற பாகுபாடுகளை களைய பெற்று ஜனநாயகம் நன்றாக வளர வேண்டும் என்று விரும்புகிறோம்.  மாண்புமிகு அமைச்சர் உதயநிதி திமுகவின் தலைவரின் பிள்ளை என்பது தான் இங்கு முக்கியம். திமுக எப்படியாவது இந்திய கூட்டணியில் இருந்து கழட்டி விடுவதற்காக  வழி தேடுகிறார்கள். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்திய கூட்டணியில் எந்த சக்திகளும் தகர்க்க முடியாது சிதறடிக்க முடியாது.  

Advertisement
Advertisement