ஜெயஸ்ரீ உயிருக்கு ஆபத்து வந்தா நான் பொறுப்பில்ல – தயாரிப்பாளர் மகனுடன் இருந்த உறவு – போலீசில் புகார் அளித்த சீரியல் நடிகர் ஈஸ்வர்

0
1287
eeswar
- Advertisement -

தன்னுடைய மனைவிக்கு அவருடைய காதலின் தந்தை கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் போலீசில் புகார் அளித்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகர் ஈஸ்வர். இவர் திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருடைய மனைவியும் சின்னத்திரையில் பிரபலமான நடிகை. அவருடைய பெயர் ஜெயஸ்ரீ. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவரும் சின்னத்திரையில் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்துவதாக நடிகை ஜெயஸ்ரீ அடையாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்திருந்தார்.

-விளம்பரம்-

இதனையடுத்து ஈஸ்வரை போலீஸ் கைது செய்தார்கள். இதனையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈஸ்வர் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். பின் இவர் செய்தியாளர்களிடம் புகார் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய மனைவி ஜெயஸ்ரீ எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவர் ராகவேஷ் என்பவருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இவர்கள் ஒன்றாக இருந்து வருவது ராகவேஷ்ஷின் தந்தையான சண்முகத்திற்கு பிடிக்கவில்லை. தொழிலதிபரும், சினிமா தயாரிப்பாளருமான சண்முகம் தனது மகனை விட்டுவிடு என்று ஜெயஸ்ரீ இடம் கேட்டு உள்ளார்.

- Advertisement -

பின் தனது மகனை விட்டு ஜெயஸ்ரீ பிரிந்து செல்ல வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதோடு அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை என்னிடம் காட்டி நிறைய முறை புலம்பியிருக்கிறார். ஆனால், என்னுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது குறித்து பேச முடியாது என்று சொல்லிவிட்டேன். பின் தனது மகனை விட்டு ஜெயஸ்ரீ செல்லவில்லை என்றால் ஜெயஸ்ரீ மீது காரை ஏற்றி கொலை செய்து விடுவேன் என்று சண்முகம் என்னிடம் மிரட்டினார். இதனால் ஜெயஸ்ரீக்கு ஏதாவது நடந்து விட்டால் அந்தப் பழியும் என் மீது வந்து விடும்.

அதனால் தான் நான் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். ஏதேனும் நடந்தால் எனக்கும் அதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. அதுமட்டுமில்லாமல் ஜெயஸ்ரீ இது போன்று பணம் பறிக்கும் நோக்கத்திலேயே பலருடன் பழகி வருகிறார். பொய்க் காரணங்களைக் கூறி விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார் என்று கூறியுள்ளார். இப்படி ஈஸ்வர் கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஜெயஸ்ரீ என்ன சொல்லப் போகிறார்? என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement