அட்ஜஸ்ட் செய்யும்படி என் அம்மாவிடம் கேட்டாங்க – சினிமாவிற்கு குட் பை சொன்ன ஷாக்கிங் காரணத்தை சொன்ன கல்யாணி

0
13586
kalyani

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான நபராக இருந்து வந்துள்ளனர். அதுவும் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டும் தான் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் நடிகை கல்யாணியும் ஒருவர். இவரது இயற்பெயர் பூர்ணிதா. ஆனால், கலைத் துறைக்காக தனது பெயரை கல்யாண என்று மாற்றிக் கொண்டார். 1990ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த இவர் தனது 16 வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். பிரபுதேவா நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான அள்ளித்தந்த வானம் படத்தில் ஜூலி என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கல்யாணி.

பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் கல்யாணி – குஷ்பூ – பாவனா

அள்ளித்தந்த வானம் படத்திற்கு பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் குருவம்மா. ரமணா. ஜெயம் போன்ற பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் கல்யாணி. திரைப்படங்களில் நடித்ததோடு பீச் கேர்ள்ஸ், ஜூனியர் சீனியர், சூப்பர் மாம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார் கல்யாணி.

- Advertisement -

இறுதியாக தமிழில் வெளியான இளம்புயல் என்ற படத்தில் நடித்தார் கல்யாணி அதன் பின்னர் இவரை சினிமாவில் காண முடியவில்லை. பேட்டி ஒன்றில் பங்கேற்ற கல்யாணி, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்தும், சினிமாவில் ஏன் நடிப்பதை நிறுத்தினேன் என்றும் கூறியுள்ளார். அந்த பேட்டியில் பேசிய கல்யாணி, நான் சினிமாவில் கதாநாயகியாக நடித்த தொடங்கிய போது பலரும் என் அம்மாவிடம் பேசுவார்கள். அவருக்கு தமிழ் தெரியாது அவர்கள் பேசும்போது ஒரு பெரிய ஹீரோ ,பெரிய தயாரிப்பாளர் போன்றவர்களின் படங்கள் தனக்கு வாய்ப்பு வந்து இருப்பதாக கூறியவுடன் என் அம்மா மிகவும் சந்தோஷத்தில் அந்த வாய்ப்புகளுக்கு சரி என்று கூறி விடுவார்.

ஆனால், அதன் பின்னர் நான் சினிமாவில் ஒரு சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று என் அம்மாவிடம் கூறினார்கள். ஆரம்பத்தில் அது ஏதாவது கால்ஷீட் அட்ஜெஸ்ட் மெண்ட்டாக இருக்கும் என்று என் அம்மா நினைத்தார். ஆனால் அதன் பின்னர் அவர்களுக்கு தவறாக பட போனை துண்டித்து விட்டார் என்று கூறியுள்ளார். இந்த காரணத்தினால்தான் நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறிய கல்யாணி தொலைக்காட்சியில் கூட தனக்கு இது போன்ற தொல்லைகளில் இருந்து உள்ளதாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இது குறித்து பேசிய அவர், எனக்கு ஒரு இயக்குனரை ஆரம்ப காலத்திலிருந்து தெரியும் அவர் இயக்கிய நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக முடிந்தது அதை நான்தான்தொகுத்து கொண்டிருந்தேன். ஒருமுறை அவர் எனக்கு கால் செய்து அதே நிகழ்ச்சியில் தொடர்ச்சியை நான் தொகுத்து வழங்க வேண்டும் என்று கூறியவுடன் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஒருமுறை நான் பெங்களூரில் இருந்த போது அந்த இயக்குநர் எனக்கு கால் செய்து இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு பப்பில் சந்திக்கலாம் என்று கேட்டார். நான் ஏன் என்று கேட்டதற்கு அந்த நிகழ்ச்சி குறித்து இன்னும் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொன்னதும் நான் அப்போது வேண்டாம், வேண்டுமென்றால் மதியம் 3 மணிக்கு காபி ஷாப்பில் மீட் செய்யலாம் என்று சொன்னேன். அவர் அதன் பின்னர் ஏதேதோ சொல்லி விட்டு சென்றவன் அதன் பின்னர் அந்த சேனலில் எனக்கு எந்த ஒருவாய்ப்பும் வரவில்லை என்று கூறியுள்ளார் கல்யாணி.

Advertisement