தோற்றத்தை பார்த்து கதை கூட கேட்காமல் செல்வராகவனை வெளியில் அனுப்பிய நடிகை. பின்னர் மகனுக்காக சென்ற கதை.

0
6094
selvaragavan
- Advertisement -

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் இயக்குனர் செல்வராகவனும் ஒருவர். இயக்குனர் செல்வராகவன் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும், தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷின் அண்ணன் என்பது தெரியும். இவர் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்,என்.ஜி.கே. என பல படங்களை இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-

அதிலும் இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் வர வேண்டும் என்று ரசிங்கர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இயக்குனர் செல்வராகவன் படைப்புகள் எல்லாமே மக்கள் மத்தியில் பதிய வைக்கும் படங்கள் ஆகும். அந்த வகையில் தன்னுடைய தம்பி தனுஷை வைத்து இயக்கிய படங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இவர் படம் இயக்குவது மட்டுமில்லாமல் பல பாடல்களையும் கூட எழுதி உள்ளார்.

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் செல்வராகவன், தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உருக்கமான ஒரு கடிதத்தை எழுதி இருந்தார். அதில், 13 வயதில் தனக்கு ஒரு கண் இல்லை என்பதால் பலர் கேலி செய்துள்ளார்கள் என்றும் அதை நினைத்து தினமும் அழுதுள்ளதாகவும் கூறி குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்றோ மேதாவி என்று குறிப்பிட்டிருந்தார்.

வீடியோவில் 9:41 நிமிடத்தில் பார்க்கவும்

இந்த நிலையில் செல்வராகவனை ஏளனம் செய்த நடிகையே பின்னர் தனது மகனுக்காக வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார் என்று பிரபல யூடுயூப் விமர்சகர்களான வலை பேச்சில் கூறியுள்ளார்கள். அது வேறு யாரும் இல்லையாம், பிரபல நடிகையான வைஜெயந்தி மாலா தான். இதுகுறித்து வலைப்பேச்சி விமர்சகர்கள் கூறுகையில், வைஜெயந்தி மாலா தனது மகனை சினிமாவில் அறிமுகம் செய்து வைக்க செல்வராகவனிடம் கேட்டுள்ளார். ஆனால், செல்வராகவன் அதனை மறுத்துவிட்டார்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே, ஒரு முறை செல்வராகவன், வைஜெயந்தி மாலாவின் மகனுக்காக ஒரு கதை சொல்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், இவரது தோற்றத்தை பார்த்ததும் செல்வராகவனிடம் கதை கூட கேட்காமல் கிளம்புங்க கிளம்புங்க என்று கூறிவிட்டார். ஆனால், செல்வராகவன் வளர்ந்த பின்னர் வைஜெயந்தி மாலா தனது மகனுக்காக ஒரு கதை தயார் செய்ய சொல்லி செல்வராகவனிடம் கேட்ட போது அவர் முடியாது என்று சொல்லிவிட்டார் என்று கூறியுள்ளனர். ஆனால், இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

Advertisement