தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையை முன்னிட்டு பிரபலங்களின் படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று தான். சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க போகிறோம்.
ராயன்:
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். தற்போது இவர் இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ராயன்’. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இது தனுஷ் உடைய ஐம்பதாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. இந்த படம் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
வேட்டையன்:
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். தற்போது இவர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பகத் பாஸில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தங்கலான்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக விக்ரம் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் மாளவிகா மோகன், பசுபதி, ஹரி, டேனியல் கால்டாகிரோன், பார்வதி என பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கங்குவா:
தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3D யில் உருவாக்கப்பட்ட வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும், வருகிற அக்டோபர் 10-ஆம் தேதி இந்த படம் திரையரங்களில் வெளியாக இருப்பதால் படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோட் படம்:
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அமரன்:
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இது மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று கதை. இந்த படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.